குடும்பத்தோடு ஓட்டலுக்கு போறீங்களா?

விருந்தோம்பலை அவமதித்த திருச்சி பிரபல உணவகம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சியில் தனியார் உணவகத்தின் அட்ராசிட்டி

‘எனது குடும்பத்தினருக்கு நேர்ந்த அவமானம்’ என தலைப்பிட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துனணத் தலைவராகவும், திருச்சி மாவட்ட நாயுடு மக்கள் நல சங்கத்தின் தலைவராகவும், திருச்சி சுப்பிரமணியபுரம்&டோல்கேட் வணிகர் சங்க தலைவராகவும் உள்ள SRV.கண்ணன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

Sri Kumaran Mini HAll Trichy

Flats in Trichy for Sale

அதில், இன்று(6.3.22) மதியம் 1 மணிக்கு எனது குடும்பத்தினர், திருச்சி மன்னார்புரத்தில் உள்ள பிரபல உணவகத்திற்கு (பதினைந்து பேருடன்) சென்று உணவருந்தினோம். உணவருந்தி முடிக்கும் முன்னரே  bill கொடுத்து ice cream, Juice ஆகியவற்றை வெளியில் நின்று சாப்பிடுங்கள் என்றும் இந்த bill இங்கே முடித்துவிட்டு வெளியில் தனியாக ஆர்டர் செய்து சாப்பிடுங்கள் என்று வெளியில் அனுப்பிவிட்டனர்.

ஏன் என்று கேட்டதற்கு customer wait செய்கிறார்கள் என்று அலட்சியமாக கூறி உள்ளனர். அதற்காக சாப்பிட்டுக் கொண்டு இருப்பவர்களை வெளியில் செல்லச் சொல்கிறீர்களே என்றதற்கு எந்தவிதமான responseம் இல்லாமல் அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டு இருந்தது எனது குடும்பத்தினருக்கு மிகுந்த மனவேதனையாகவும் அவமானமாகவும் இருந்துள்ளது. எனது குடும்பத்தினர் செலுத்திய bill amount 11,297. எனது குடும்பத்தினரை அவமானம் செய்த உணவகத்தின் நிர்வாகத்தினருக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் போன்றவர்களை வாடிக்கையாளர்கள் புறக்கணிப்பதே நாம் இவர்களுக்கு கற்பிக்க போகும் பாடம்” என பதிவிட்டுள்ளார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இது குறித்து நாம் SRV.கண்ணன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, “என் முகநூல் பதிவை பார்த்த பின்பு, சம்பந்தப்பட்ட உணவகத்தைச் சேர்ந்தவர்கள் என்னை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்” என்றார். ஒவ்வொரு தொழில் நிறுவனங்களும், வாடிக்கையாளர்களே தங்கள் தெய்வம் என விளம்பரப்படுத்தியிருப்பார்கள். தமிழகத்தின் விருந்தோம்பல் என்பது மிகவும் பாராட்டப்படும் விஷயமாகும். ஒரு பிரபலமான உணவகத்தில் விற்பனையை அதிகரிக்க வேண்டும்  என்பதற்காக வாடிக்கையாளர்களை அலட்சியமாக நடத்தும் போக்கு என்பது மிகவும் கண்டிக்கத்தக்கதே. இதை பிற நிறுவனங்களும் உணர வேண்டும் என்பதற்காகவே இந்த செய்தி பதிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.