திருச்சி மாநகர பெரியகுளத்தில் நள்ளிரவில் அதிரடி சோதனை.. ! அங்குசம் செய்தி எதிரொலி..
திருச்சி மாநகர பெரியகுளத்தில் நள்ளிரவில் அதிரடி சோதனை.. ! அங்குசம் செய்தி எதிரொலி..
திருச்சி பெரியகுளத்தில் பெயரில் ஒதுக்கப்பட்ட கோடி நிதி என்ன ஆனது என்ற தலைப்பில் அங்குசம் இணையதளத்தில் செய்தி வெளியானது.
திருச்சி மாநகர பகுதியில் அமைந்துள்ள பொன்மலைப்பட்டி மாநகராட்சிக்குட்பட்ட பெரிய குளம் பகுதியில் நேற்று 24/10/2020 நள்ளிரவு மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை பொதுப்பணிதுறை உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் மற்றும் பொன்மலை காவல் நிலைய ஆய்வாளர் சகாயம் அன்பரசு தலைமையிலான குழு மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மடக்கி பிடித்தனர்.
இதில் சட்டத்திற்கு புறம்பாக கனிம வளங்களை திருடும் வண்ணம் செயல்பட்ட நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு லாரிகள் மற்றும் ஜேசிபி போன்றவைகள் காவல் நிலையத்திற்கு கைப்பற்றப்பட்டன.
-ஜித்தன்.
இது குறித்து அங்குசம் இணைதளத்தில் வெளியான செய்தியின் லிங்….
திருச்சி பெரிய குளத்தின் பெயரில் ஒதுக்கப்பட்ட கோடி நிதி என்ன ஆனது !
https://angusam.com/trichy-mavatta-vadigal-kulam/