சினிமா திரைப்பட நாயக, நாயகிகள் கொண்டாடப்பட வேண்டியவர்களா? புரிய வில்லையே? அதியன் பதில்கள் (பகுதி-4)

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் “பிரதமர் வேட்பாளர்” கனவில் இருப்பதாகத் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளது உண்மையா?
மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர் கனவில் இருப்பதாகப் பெ.மணியரசன் கூறியிருப்பது உண்மைக்கு மாறானது. “என் உயரம் எனக்குத் தெரியும்” என்றுதான் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வர். மு.க.ஸ்டாலின்
முதல்வர். மு.க.ஸ்டாலின்

அங்குசம் இதழ்..

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “திராவிடம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்பதை எப்படி எடுத்துக்கொள்வது?
திராவிடக் கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளர் திராவிடம் குறித்து தெரியாது என்ற உண்மையைப் போட்டு உடைத்திருக்கக்கூடாது. நிறைய தெரிந்து கொள்வேன் என்று கூறியிருக்க வேண்டும் என்பதே அதியனின் எதிர்பார்ப்பு.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

நாம் தமிழர் ‘சாட்டை’ துரைமுருகன் “பெரியார் புடுங்கிய ஆணி” என்னன்னு சொல்லுங்க என்று கேட்டுள்ளாரே? அதியனிடம் பதில் உள்ளதா?
உள்ளது என்றாலும், இளமை காலத்தில் கொளத்தூர் மணி தலைமையில் சீமான் பெரியார் குறித்துப் பெருமையாகப் பேசிய பழைய வீடியோவைப் பலரும் வெளியிடச் சாட்டை போட்ட பதிவை எடுத்துவிட்டாராமே.

‘சாட்டை’ துரைமுருகன்
‘சாட்டை’ துரைமுருகன்

தூத்துக்குடியில் ஒரே சாதி சார்ந்தவர்கள் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள் 2ஆவது நாளில் பெண் வீட்டினரால் கொலை செய்யப்பட்டுள்ளது எதை உணர்த்துகின்றது?
காதலித்தவன் ஏழை என்பதுதான் கொலைக்கு அடிப்படையே. அறிவு வளரவளர சாதியக் கட்டுமானங்கள் கெட்டிப்பட்டிருப்பதையும் வர்க்க முரண்பாடுகள் உள்ளது என்பதையே உணர்த்துகின்றது.

ஆளுநர் கோப்புகளின் மீது நடவடிக்கை எடுக்கமறுத்து, காலம் தாழ்த்துகிறார் என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதில் சரியான நடவடிக்கையாகக் கருதமுடியுமா?
உச்சநீதிமன்றத்தை நாடுவதைவிடத் தமிழ்நாடு அரசுக்கு வேறுவழியில்லை. கேரளாவும் ஆளுநர் செயல்பாடுகளின் மீது உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. அதிகாரம் இல்லாத ஆளுநர்கள் ஆட்டம் போடுவதை ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பது என்பது வெட்ககேடான செயல்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து ஜனவரி 26ஆம் நாள் வெளிவரவுள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தின் முன்னோட்டம் அதியன் பார்த்தாரா? கருத்து என்ன?
மொழிவழி மாநிலப் பிரிவினைக்கு முன்பு தமிழ்நாட்டின் ஒரு பகுதி யாக இருந்த கோலார் தங்கவயல் பகுதியில் ஆதி- திராவிட மக்களின் தலைவன் தங்கலானின் போராட்ட வரலாறுதான் கதை. முன்னோட்டக் காட்சிகளில் தமிழினத்தின் தொன்மையும் பழமையும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பா.இரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடமைக் கட்சியின் தலைவர் தோழர் சங்கரய்யாவுக்கு ‘மதிப்புறு முனைவர்” பட்டச் சான்றிதழில் ஆளுநர் ஆர்.என்.இரவி கையெழுத்திட மறுத்திருப்பது முறையா?
முறையல்ல என்பதே அதியன் கருத்து. கையெழுத்திட மறுத்ததற்கு உரிய காரணங்களை ஆளுநர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவித்திருக்கவேண்டும். அதையும் ஆளுநர் செய்யவில்லை. ஆளுநர் பணி என்பது கோப்பு களைக் கிடப்பில் போடுவதுதானா? என்று வாக்களித்த மக்கள் கேட்கிறார்கள்.

தோழர் சங்கரய்யா
தோழர் சங்கரய்யா

எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒன்றிய அரசால் ஒட்டு கேட்கப் படுவதாகக் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளாரே? காரணம் என்ன?
ஒன்றிய அரசின் ஆளும்கட்சிகள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்ற வழக்கமான செயல்தான் இந்தத் தொலைபேசி ஒட்டுக்கேட்பு என்பது. இந்தியா கூட்டணி உருவான பின்பு தோல்வி பயத்தில்தான் ஆளும் பாஜக அரசு தொலைபேசி உரையாடலை ஒட்டுகேட்டு வருகின்றது என்று இராகுல் காந்தி கூறியுள்ளார்.

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

திரைத்துறையில் ‘இயக்குநர் சிகரம்’ என்று பாலச்சந்தர் அழைக்கப்படக் காரணம் என்ன?
எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் 1960களுக்குப் பின் நாயகப் பிம்பத்தோடு நடித்துக்கொண்டிருந்தபோது, அவர்களின் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக இருந்த நாகேஷ் அவர்களை நாயகனாக்கி, சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, எதிர்நீச்சல் போன்ற படங்களை இயக்கி வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றவர் இயக்குநர் பாலச்சந்தர்.

இயக்குநர் பாலச்சந்தர்
இயக்குநர் பாலச்சந்தர்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக பொதுச்செயலாளராக இருந்த செல்வி ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தவர் என்று கூறியுள்ளார்? இது உண்மையா?
உண்மை இல்லை பொய். 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா தோல்வியடைந்தார் என்பது உண்மை. டெபாசிட் இழக்கவில்லை என்பதும் உண்மை.

அண்ணாமலை
அண்ணாமலை

திரைப்பாடல் ஆசிரியரில் முதல் பெண் ஆசிரியர் யார்?

1968ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த குடியிருந்த கோயில் திரைப்படத்தில் ’குங்குமப் பொட்டின் மங்கலம்’ என்ற பாடலை எழுதியவர் ரோஷனாரா பேகம் என்பவர்தான் முதல் பெண் பாடல் ஆசிரியர்.

10 ஆண்டுகாலத்திற்கும் மேலாகச் சிறையில் உள்ள இஸ்லாமியர் களை விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதை ஏற்கமுடியாது என்று சீமான் கூறியிருப்பது பொருத்தமுடையதா?
10 ஆண்டுகாலத்திற்கு மேலாகச் சிறையில் விசாரணை கைதிகளாக உள்ள இஸ்லாமியர்கள் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் தமிழ்நாடு அரசு விடுதலை செய்யவே முடியாது என்பது சீமானுக்கும் தெரியும். எல்லாம் ஓட்டு அரசியல்தான்.

சீமான்
சீமான்

செய்தி இதழ்களில் தவறான செய்திகள் ஏதேனும் வெளிவந்துள்ளனவா? எடுத்துக் காட்டுங்கள் இருந்தால் தெரிவிக்கவும்…

ஆந்திர மாநிலத்தின் விஞ்ஞானி நாயுடம்மா இறந்துபோனார். அவரைப் பெண் என்று குறிப்பிட்டுச் செய்தி வெளிவந்தது. உண்மையில் அவர் ஆண். 1996ஆம் ஆண்டு கரூர் நகர மன்றத் தேர்தலில் தலைவராக நந்தினி தமிழரசன் என்னும் பெண் வெற்றி பெற்றார் என்று செய்தி வெளியிடப்பட்டது. நந்தினி தமிழரசன் உண்மையில் ஆண்.

சினிமா என்னும் திரைப்பட நாயக, நாயகிகள் கொண்டாடப்பட வேண்டியவர்களா? புரிய வில்லையே?
சினிமாவில் காட்டப்படும் காட்சிகள் அனைத்தும் செயற்கைத் தன்மை கொண்டவை. உண்மை என்று நம்பும் இரசிகர்களுக்காக 1975ஆம் ஆண்டில் சினிமா பைத்தியம்’ என்ற திரைப்படத்தை முக்தா சீனிவாசன் இயக்கி வெளியிட்டார்.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் “மீண்டும் மோடி அவர்களைப் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தால் பாஜக தோல்வி அடையும்” என்று பாஜகவைச் சேர்ந்தத சுப்பிரமணியசுவாமி கூறியுள்ளது உண்மையா?

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

தமிழகத்தில் உள்ள தந்தி தொலைக் காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போது சுப்பிரமணிய சுவாமி கூறியது உண்மைதான். தலைநகர் டெல்லியில் இருக்கிறார். அனைத்துக் கட்சிகளின் நகர்வுகளையும் கூர்ந்து ஆராய்ந்து வருபவர். பாஜக தோல்வி அடையுமா என்பது தேர்தலின்போதுதான் தெரியும்.

தொடரும்….

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.