பேருந்தை வழிமறித்து குத்தாட்டம்.! கல்லூரி மாணவிகள் அலறல் !
பேருந்தை வழிமறித்து குத்தாட்டம்.! கல்லூரி மாணவிகள் அலறல் !
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரிக்கு திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவிகள் வந்து செல்கின்றனர். கல்லூரி நிர்வாகமே பேருந்துகளையும் இயக்கி வருகிறது.
இந்நிலையில் வழக்கம்போல் கல்லூரி முடிந்து மாடப்பள்ளி பகுதி சாலை வழியாக பேருந்து சென்று கொண்டிருந்தபோது, அந்தப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் திடிரென்று நடுரோட்டில் பேருந்தை வழிமறித்து நிறுத்தி செல்போனில் குத்து பாடல்களை அலறவிட்டு வளைந்து நெளிந்து நடனம் ஆடியுள்ளனர், ஆர்வகோளாரு இளைஞர்கள் சிலர்.
அதில் ஒருவன் காவி நிறம் லுங்கி அணிந்து இருந்தான். மேலும் பேருந்தை அங்கிருந்து செல்ல விடாமல் நிறுத்தி அடாவடி செய்து நடனம் ஆடிக்கொண்டே இருந்தனர் . இந்த சம்பவம் அந்த வழியாக சென்ற பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. பலர் இதனை கண்டும் காணாமலும் சென்றுள்ளனர்.
சிலர் இதனை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இதனைப்பார்த்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியாகி, இந்த ஆர்வகோளாரு இளைஞர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கல்லூரி பேருந்தை வழிமறித்த ஆர்வகோளாரு இளைஞர்களை போலீஸ் தேடி வருகின்றனர்.
மணிகண்டன், திருப்பத்தூர்.