விஜயகாந்திற்கும் பாரத ரத்னா… அதியன் பதில்கள் (பகுதி- 8)

0

வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ சோதனைக் குட்படுத்தபட்டவர்களின் மரபணுக்கள் மலத்தில் உள்ள மரபணுக்களுடன் ஒத்துப்போகவில்லை என்று சிபிசிஐடி தரப்பில் கூறப்பட்டுள்ளது. வழக்கு என்னவாகும்?
வழக்கில் உண்மையைக் கண்டறிய அடுத்த கட்டமாக என்ன சோதனை செய்யலாம் என்பதை முடிவு செய்வார்கள். அப்படியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் வழக்கைக் கைவிடுவார்கள்.

வேங்கைவயல்

 

 இராமர் கோயில் திறப்பு விழாவிற்குத் தமிழ்நாட்டு சைவ மடாதிபதிகள் அழைக்கப்படவில்லை என்று ஆதீனங்கள் கவலை தெரிவித்துள்ளனரே….. நியாயம்தானே?
நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்பதற்குத் தமிழ்நாட்டு ஆதீனங்கள் அழைக்கப்பட்டனர். இப்போது நடந்து முடிந்துள்ள இராமர் கோயில் என்பது வைணவத்தோடு தொடர்புடைய நிகழ்ச்சி. இதில் சைவ மடாதிபதிகளுக்கு என்ன வேலை இருக்கும். அதனால்தான் அவர்கள் அழைக்கப்படவில்லை.

- Advertisement -

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜகவைப் பின்னுக்குத் தள்ளி நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டின் மிகப்பெரிய 2ஆவது கட்சியாக வளரும் வாய்ப்பு உள்ளது என்று இரவீந்திரன் துரைசாமியின் ஆரூடம் பலிக்குமா?
எதையும் அறிவியல் பூர்வமாக அணுகுவதே நல்லது. ஆரூடங்கள் எப்போதும் பலிக்காது. ஆரூடங்கள் பலிக்கும் என்றால் இந்த உலகம் 2000 ஆண்டின் முடிவின்போது அழிந்திருக்கும். நாம் தமிழர் கட்சி 2ஆம் இடத்திற்கு வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பதே கள எதார்த்தம்.

சீமான்
சீமான்

இந்திய விடுதலைக்குக் காந்தியைவிட நேதாஜியே அதிகம் உழைத்திருக்கிறார் என்று ஆளுநர் ஆர்.என்.இரவி கூறியிருப்பதன் உள்நோக்கம் என்ன?
ஆளுநர் ஆர்.என்.இரவி தான் அரசியல் சட்டப்படி பொறுப் பேற்றுக்கொண்ட ஆளுநர் பொறுப்பில் இருப்பதை அடிக்கடி மறந்து விட்டு, சங்பரிவார் களின் அரசியலைப் பேசிக் கொண்டிருக்கிறார். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகில்லை.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

பள்ளிக் கல்வித்துறையால் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் ‘பெற்றோர்களைக் கொண்டாடுவோம்’ என்ற நிகழ்ச்சியை நடத்துவது ஏன்?
உங்களைப் போலவே நமக்கும் புரியவில்லை. தனியார் சுயநிதிப் பள்ளிகளில், 10 மற்றும் +2 மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பு, மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து, மாணவர்களைப் பாதபூஜை செய்யச் சொல்வார்கள் என்பது கடந்தகால நடைமுறை. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை என்ன ஏற்பாடு செய்துள்ளது என்பது தெளிவாக்கப்படவில்லை.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்
4 bismi svs

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைக்கான நடைப் பயணம் தற்போது கிழக்கிலிருந்து மேற்காக அமைக்கப்பட்டிருக்கின்றது. இது இராகுலுக்கு வெற்றியைத் தருமா?
நடைப்பயணம் இராகுலுக்கு வெற்றி தருகின்றதோ இல்லையோ, பாஜகவுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கின்றது போலும். அசாமில் இராகுல் காந்தி சங்பரிவார்களால் தாக்கப்பட்டுள்ளார். அசாம் மாநில அரசு நடைப்பயணத்திற்குத் தடை விதித்துள்ளது. தடை களை உடைத்தெறியும்போதுதான் தலைவன் பிறப்பான்.

ரேவந்த் ரெட்டி - ராகுல்காந்தி பிரச்சாரம் வியுகம்
 ராகுல்காந்தி 

திருச்சியில் வெளியிடப்பட்ட மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மேனாள் தலைவர் பெ. இராஜேந்திரன் எழுதிய ‘மந்திரக் கணங்கள்’ நூல் குறித்து அதியனின் மதிப்பீடு என்ன?
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வளர்ச்சி முழுவதும் ஆவணங்களுடன் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழர்களின் வரலாறு இதுபோன்று ஆவணங்களுடன் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது உண்மையே.

பெ. இராஜேந்திரன்
பெ. இராஜேந்திரன்

பீகார் முன்னாள் முதல்வர் கற்பூரி தாகூருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்படும் என்று குடியரசுத்தலைவர் அறிவித்துள்ளது நல்ல செய்திதானே?
மோடியின் பரிந்துரையின்பேரில்தான் பாரத ரத்னா” விருது கற்பூரி தாகூருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. அவர் இறந்து 35 ஆண்டுகள் கழித்து வழங்கப்படுகின்றது. காரணம் பீகாரில் வலுவாக உள்ள பாஜக எதிர்ப்பு அரசியலை எதிர்கொள்ள மோடி பாரத ரத்னா கொடுத்துக் காய் நகர்த்தி யுள்ளார். தமிழ்நாட்டில் விஜயகாந்த்திற்கும் பாரத ரத்னா கிடைத்தால் ஆச்சரியமில்லை.

ஆந்திராவில் ஜெகன் மோகனுக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி, அவரின் சகோதரி ஷர்மிளாவை மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆக்கப்பட்டுள்ளது குறித்து அதியன் கருத்து யாது?
அரசியல் வாரிசு அரசியல் எதிர்க்கப் பட வேண்டும் என்ற வலுவான கருத்து வலம் வந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ஒரு வாரிசை எதிர்க்க இன்னொரு வாரிசை இறக்கியிருப்பது காங்கிரஸ் கட்சியின் இராஜதந்திரமாகவும் இருக்கலாம்.

 இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் மேற்கு வங்கத்தில் மம்தாவும், பஞ்சாப்பில் ஆம்ஆத்மியும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துள்ளார்களே… என்னவாகும் இந்தியா கூட்டணி?
மேற்கு வங்கம், பஞ்சாப், தில்லி, கேரளா போன்ற சில மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு சுமூகமாக இருக்காது என்பது யாரும் அறிந்ததே.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை. இந்தியா கூட்டணியில் இருப்பேன் என்று மம்தா கூறியுள்ளதையும் கவனிக்கவேண்டும்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.