பொதுமக்கள் கவனத்திற்கு ….
சங்ககிரி பகுதியைச் சேர்ந்த 80 வயது முதியவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார். அவரை கடந்த மாதம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் தாங்கள் சென்னை காவல்துறையிலிருந்து பேசுவதாகவும் மேற்படி முதியவருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் அவரை வீடியோ காலில் தொடர்பு கொண்ட போது எதிர்முனையில் பேசியவர்கள் ஆர்மி அதிகாரிகள் அணியும் உடையில் இருந்துள்ளனர். தாங்கள் கேட்கும் தொகையை கொடுத்தால் மேற்படி வழக்கிலிருந்து தாங்கள் விடுவித்து விடுவதாக கூறி ஒரே வாரத்தில் சிறிது சிறிதாக மொத்தம் 50 லட்சம் பணத்தை மோசடி செய்து பெற்றுள்ளனர். மேற்படி பணம் பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கி கணக்குகளில் அவர்கள் பெற்று வேறு வேறு மாநிலங்களில் பணத்தை எடுத்துள்ளனர். முதியவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சேலம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பொதுமக்கள் கவனத்திற்கு:
இவ்வாறு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி மிரட்டும் நபர்களிடம் ஏமாந்து விடக் கூடாது. உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகி புகார் அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.







Comments are closed, but trackbacks and pingbacks are open.