தமிழக அரசின் 2025 ஆம் ஆண்டு ஒளவையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதியன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் சர்வதேச மகளிர் தின விழாவின் போது சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த  ஒருவருக்கு ஒளவையார் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருது பெறுபவருக்கு ரூ.1.50 இலட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவ்வாண்டிற்கான ஒவையார் விருது பெற தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://award.tn.gov.in) பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

 2025 ஆம் ஆண்டு ஒளவையார் விருது பெற தகுதிகள்:

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பெண்களுக்கான இச்சமூக சேவையை தவிர்த்து வேறு சமூக சேவைகள் இவ்விருதுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. விருது பெற  விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.12.2024. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.