செயின்ட் ஜோசப் கல்லூரி மூலிகை தோட்ட மையத்தில் தொழில் முனைவருக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம்
செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக நாகமங்கலத்திலுள்ள கல்லூரி மூலிகை தோட்ட மையத்தில் தொழில் முனைவருக்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது.
புனித வளனார் கல்வி நிறுவனங்களின் அதிபர் அருள் முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் சே ச முகாமிற்கு தலைமை தாங்கினார் விரிவாக்கத் துறையின் இயக்குனர் அருள் முனைவர் சகாயராஜ் சே ச அவர்கள் தொடக்க உரையாற்றினார்.
மாவட்ட தொழில் மைய வேலைவாய்ப்புகள் மற்றும் அரசு நல திட்டங்கள் பற்றி டியூ அறக்கட்டளையின் இயக்குனர் சந்திரசேகர் அவர் விளக்க உரையாற்றினார் மற்றும் பங்கேற்பாளர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.
மூலிகை மருத்துவ பயிற்சி வணிகம் மற்றும் சித்த மருத்துவம் பற்றி ஒருங்கிணைப்பாளர் லெனின் அவர்கள் செய்முறை பயிற்சி அளித்தார் மேலும் முருங்கை மதிப்பு கூட்டுப் பொருள்கள் பற்றி விரிவாக்கத் துறையின் ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் அவர்களால் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது பெண்கள் நலம் சார்ந்த வணிக பயிற்சியை பற்றி ஒருங்கிணைப்பாளர் யசோதை அவர்கள் விளக்கம் அளித்தார்கள்
வந்தவர்களை ஒருங்கிணைப்பாளர் லெனின் அவர்கள் வரவேற்றார் இறுதியில் ஒருங்கிணைப்பாளர் யசோதை அவர்கள் நன்றி கூறினார் நிகழ்ச்சியின் முடிவில் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்க திட்டம் பற்றிய கையேடு ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கிராம மற்றும் நகர குடிசை வாழ் பகுதி மக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட 46 பேர் கலந்து கொண்டார்கள் குறிப்பாக உற்பத்தி அடிப்படையிலான தொழில்கள் மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் வியாபாரம் சார்ந்த தொழில்கள் பற்றியும் சிறப்பு மானிய சலுகைகள் பற்றியும் கடன் தொகை பயனாளிகள் சுய முதலீடு தேவையான ஆதார ஆவணங்கள் முதலீட்டு மானியம் பின்முனை வட்டி மானியம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.