செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறை சார்பாக புற்று நோய் மற்றும் உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம்
செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக புற்றுநோய் மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் கல்லூரி வளாகத்தில் உள்ள சமூதாய கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் சே ச மற்றும் இணை முதல்வர் முனைவர் ராஜேந்திரன்தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச இந்நிகழ்ச்சியில் தொடக்கவுரையாற்றினார்
டாக்டர் ஜீ விஸ்வநாதன் சிபிசிசி புற்றுநோய் மையத்தின் மருத்துவர் நவீன் மற்றும் மருத்துவர் விக்னேஷ்வர் புற்று நோய் அறிகுறிகள் தடுப்பு முறைகள் பற்றியும், மருத்துவர் ஸ்ரீரீபா மற்றும் ஆரோக்கிய இயக்கத்தின் தலைவர் சாந்தி உடல் ஆரோக்கியம் பற்றியும் விளக்கவுரை அளித்தார்கள். மாணவர்களின் கேள்விகளுக்கும் அவர்கள் பதிளாளித்தார்கள்.
விரிவாக்கத்துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்தரன் நிடித்த நிலைத்த இலக்கு பற்றி எடுத்துக் கூறினார். வந்தவர்களை முதுநிலை ஒருங்கிணைப்பாளர்கள் லெனின் மற்றும் விஜயகுமார் வரவேற்றார்கள். முடிவில் இளநிலை ஒருங்கிணைப்பாளர் யசோதை நன்றி கூறினார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் பணிமுறை ஒன்று மற்றும் இரண்டின் சுகாதாரகுழுவில் உள்ள மாணாக்கர்கள் கலந்து கொண்டார்கள் தொழில் நுட்ப உதவிகளை அமலேஸ்வரன் செய்திருந்தார்.
— அங்குசம் செய்திப்பிரிவு.