பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்
திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் விரிவாக்கத்துறை- செப்பர்டு மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் 2.0 திட்டத்தின் கீழ் கல்லூரி வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது

கல்லூரியின் செயலர் அருள்முனைவர் அமல் சே.ச தலைமையுரையில் பெண்கள் குழந்தைககள் வாழ்வு நிலை இன்று வளமானதாக இல்லை இன்றைய சமுதாயத்தில் அவலநிலையில் உள்ளார்கள் கல்லூரி மாணவர்களாகிய நீங்கள்தான் செப்பர்டு சேவை செய்யும் கிராமங்களில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும் என்று பதிவு செய்தார்
விரிவாக்கத்துறை இயக்குனர் அருள்முனைவர் சகாயராஜ் சே.ச இரண்டாம் உலகப் போருக்கு பின்னர்தான் அமைதி உண்மை நீதி சமூக ஒப்பந்தம் சமுதாய பாதுகாப்பு குறிப்பாக பெண்களுகான சட்டங்களையம் திட்டங்களையும் வகுத்துள்ளது என்பதினை பற்றி தொடக்கவுரையாற்றினார்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் 2 ன் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை ஆய்வாளர் வசுமதி தனது சிறப்புரையில் தற்பொழுது பெண்கள் மற்றும் குழந்தைகள் எவ்வாறு வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர் அந்த சமயத்தில் நாம் என்ன செய்யவேண்டும் என்றும் மேலும் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து அதை நடைமுறையில் எப்படி செயல்படுத்துவது குறித்து செயல்முறை விளக்கமளித்தார் மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலலித்தார்
திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் மற்றும் நன்னடத்தை அதிகாரி ஸ்ரீவித்யா தனது சிறப்புரையில் குடும்ப சூழல் நண்பர்களின் வட்டம் மற்றும் சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களால் ஒருவர் எவ்வாறு பாதிப்படைகிறார் அவர்களுக்கு பாதுகாப்பு அலகு எப்படிப்பட்ட மறுவாழ்வினை கொடுக்கிறது என்பதனை பற்றி விளக்கமாளித்தார்
திருச்சிராப்பள்ளி குழந்தைகள் நல குழு உறுப்பினர் முனைவர் பிரபு தனது சிறு வயதில் ஏற்படும் மாற்றங்கள் குழந்தைகளுக்கான உரிமைகள் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் அரசின் திட்டங்கள் பற்றி கருத்துரையில் எடுத்து கூறினார்
இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் வரவேற்றார் ஆங்கில துறை மாணவி வின்சி நன்றி கூறினார் கல்லூரி மாணவர்கள் 150 கலந்துகொண்டார்கள் மேலும் கல்லூhரி மாணாக்கர்கள் இக்கருத்தரங்கம் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது என கூறினார்கள்.
கலந்து கொண்ட அனைவரும் காவல்உதவி செயலியை பதிவிறக்கம் செய்து அச்செயலி வழியாக காவலர்களுடன் பேசினார்கள் என்பது குறிப்பிடதக்கது இளநிலை ஒருங்கிணைப்பாளர் யசோதை இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்