சாத்தூரில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி !
விருதுநகர் மாவட்டம்,சாத்தூர் தாலுகா, மேட்டமலை அருகே உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், சாத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில்குமரன், அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தமிழ்செல்வி, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு தொடர்பாக 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் முன்னிலையில், எடுத்துக் கொண்ட உறுதி மொழியில்,
விபத்தில்லாத தமிழகத்தை உருவாக்கிடுவோம், தலை கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் இயக்க மாட்டேன், மொபைல் போனில் பேசியபடி வாகனம் இயக்க மாட்டேன், குடிபோதையில் வாகனம் இயக்க மாட்டேன், அதிக வேகமாக வாகனங்கள் இயக்க மாட்டேன், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை இயக்க மாட்டேன், சாலை குறியீடுகளை மதித்து நடப்பேன், போக்குவரத்து காவலரின் கை அசைவுகளை மதித்து நடப்பேன்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க மாட்டேன், குறுகிய பாலம் மற்றும் சாலை வளைவுகளில் வாகனங்களை முந்த மாட்டேன், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடுவேன், மருத்துவமனை, பள்ளி மற்றும் கல்லுாரி அருகே ஒலி எழுப்பமாட்டேன், இனி சாலையில் பயணிக்கும் போது வாகனம் ஓட்டும் போதும் சாலை விதிகளையும் பின்பற்றி விபத்து இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
— மாரீஸ்வரன்.