பள்ளி கல்லூரி மாணவர்களிடையே போதைப் பழக்கத்து எதிராக மதுரையில் முன்னெடுக்கப்படும் ANTI DRUG CLUB !
தமிழகம் முழுவதும் போதை பொருள் பயன்பாட்டுக்கு எதிரான தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பாக பள்ளிகள் கல்லூரிகள் பல்வேறு சங்கங்கள் மற்றும் பொது இடங்களில் ANTI DRUG CLUB அமைப்பு தொடங்கப்பட்டு போதை பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் 100-வது நிகழ்ச்சி வேலம்மாள் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் அக்-18 அன்று ANTI DRUG CLUB ஆரம்பிக்கப்பட்டு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர்களிடம் போதை பொருள்கள் பற்றியும் ANTI DRUG CLUB எவ்வாறு செயல்படுகிறது போதைப் பொருள் இளைஞர்களிடம் பரவாமல் தடுக்க மருத்துவர்களால் காவல்துறைக்கு எவ்வாறு உதவலாம் என்பது பற்றியும் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நிகழ்வுக்கு தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
போதைப் பொருள் துஷ்பிரயோகம் என்ற தலைப்பில் மருத்துவ கல்லூரி மாணவி சகானா மற்றும் போதைப் பொருள் துஷ்பிரயோகத்தை எவ்வாறு தடுப்பது என்ற தலைப்பில் மருத்துவ கல்லூரி மாணவர் ராகுல் ஆகியோர் உரையாற்றினர்.
Anti Drug Club ன் மூலம் இளைஞர்கள் எவ்வாறு காவல்துறையை தொடர்பு கொள்ளலாம் என்பது பற்றி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவன் எடுத்துரைத்தார். மருத்துவர்கள் மதுவிலக்கு காவல்துறையினர் மற்றும் மருத்துவக் கல்லூரி செவிலியர் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.