சிறுகமணி – வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சியில் பங்கேற்க அழைப்பு
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் வேளாண்மை அறி வியல் நிலையம் சார்பில் இம்மாதத்தில் விவசாயிகளுக்கான பல்வேறு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வகுப்புகளை நடைபெற உள்ளது.
இது குறித்து நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜா பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற நவ.5ம் தேதி இயற்கை வேளாண்மை உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர்களுக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி.
மழைக்கால நோய்களிலிருந்து பயிர்களை பாதுகாப்பது எப்படி? என்ற தலைப்பிலும், நவ.6ம் தேதி முசிறி வட்டாரம் திருத்தலையூரில் பருத்தியில் மகசூல் அதிகரிக்கும் உத்திகள் குறித்த களப்பயிற்சியும், நவ.8ம் தேதி திருச்சி துறையூர் வட்டா ரத்தில் மக்காச்சோளத் தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை களப்பயிற்சி நடைபெறுகிறது.
நவ. 12ம் தேதி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நெல்லில் நீர் மேலாண்மை தொழில் நுட்பங்கள் குறித்த நிலையப் பயிற்சி, நவ.13ம் தே வையம் பட்டி வட்டாரத்தில் சிறு தானியங்களில் மதிப்புக் கூட்டுதல் தொழில்நுட் பங்கள் களப்பயிற்சியும், நவ.14ம் தேதி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் எண்ணெய் வித்துப் பயிர்களில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் நிலையப்பயிற்சி நடைபெறுகிறது.
நவ.15ம் தேதி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பருத்தியில் உயர் விளைச்சலுக்கான தொழில்நுட்ப உத்திகள் நிலையப் யப் பயிற்சியும், நவ.17 ம் தேதி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நவீன காய்கறி சாகுபடி தொழில் நுட்பங்கள் நிலையப்பயிற்சி நடைபெறுகிறது.
நவ.19ம் தேதி முசிறி வட்டாரத்தில் மக் காச்சோளத்தில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் களப்பயிற்சியும், நவ. 20ம் தேதி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு தொழில்நுட்பங் கள் கட்டணப் பயிற்சியும், நவ.21ம் தேதி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளில் மதிப் புக் கூட்டுதல் தொழில் நுட்பங்கள் நிலையப்பயிற்சி நடைபெறுகிறது.
நவ.22ம் தேதி துறையூர் வட்டாரம் மக் காச்சோளத்தில் இயற்கை வேளாண்மை தொழில் நுட்பங்கள் களப்பயிற் சியும், நவ. 27ம் தேதி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கரும்பில் மகசூல் அதிக ரிக்கும் உத்திகள் நிலையப் பயிற்சியும், நவ. 28ம் தேதி தொட்டியம் வட்டாரம். கொளக்குடியில், ஒட்டுக் கத்தரி சாகுபடி களப்பயிற்சி நடைபெற உள்ளது.
இந்த பயிற்சிகள் குறித்து சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தொலைபேசி: 04312962854. 9171717832 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தகவல்களை பெற்றுக்கொண்டு பயன்பெறுமாறு தொிவிக்கப்பட்டுள்ளது.