தடை செய்யப்பட்ட 1400 கிலோ கூலிப் கணேஷ் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறை !
கிருஷ்ணகிரியில் இருந்து மதுரைக்கு கண்டெய்னர் லாரி மூலம் கோழி தீவனம் கால்நடை மருந்துகள் பேபி கிட் கொண்டு வரும் லாரியில் மறைமுகமாக தடை செய்யப்பட்ட கூலிப் கணேஷ் புகையிலை 1400 கிலோ பொருட்களை பறிமுதல் செய்தும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கண்டெய்னர் லாரி மற்றும் கடத்திவரப்பட்ட கூலிப்பை வாங்க வந்த ஷிப்ட் கார் லோடு வாகனம் 4 உட்பட 4 பேரை காவல் துறையினா் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் இருந்து கண்டெய்னர் லாரி மூலம் ஹிமாலயா பேபி கிட் போன்ற அழகு சாதன பொருட்கள், கோலி தீவனம் மற்றும் கால்நடை மருந்துகள் கொண்டு வரும் KA. 04 AB .5492 எண் கொண்ட கண்டெய்னர் லாரி மூலம் தமிழக அரசு தடை செய்யப்பட்ட கூலிப் கணேஷ் புகையிலை மூட்டைகளை மறைமுகமாக கடத்தி வருவதாக புதூர் காவல் நிலைய ஆய்வாளர் மாடசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பெயரில் ஆய்வாளர் மாடசாமி தலைமையில் காவல் துறையினர் மதுரை சர்வேயர் காலனி 120 அடி ரோடு பகுதியில் வரும் கண்டைனர் லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்த போது லாரியில் தடை செய்யப்பட்ட கூலிப் கணேஷ் புகையிலை 94 மூட்டையில் 1400 கிலோ கூலிப் மற்றும் கணேஷ் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கணேஷ் புகையிலை கடந்தி வந்த கண்டெய்னர் லாரி மற்றும் கூலிப் கணேஷ் புகையிலை பொருட்களை சில்லறை விற்பனைக்கு வாங்க வந்த வாகனம் ஷப்ட் கார் இரண்டு லோடு வாகனங்கள் மற்றும் நான்கு பேரை கைது செய்து புதூர் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறை தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.