அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

‘பரோஸ்’ நாளை ரிலீஸ்! மோகன்லால் சொன்ன சர்ப்ரைஸ் நியூஸ்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

Aashirvad Cinemas ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள மெகா ஹீரோ  மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும்,  பிரம்மாண்ட 3D ஃபேண்டஸி படம்  ‘பரோஸ்’. நாளை (டிசம்பர் 25) ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகும் இப்படத்தை ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை வழங்குகிறார். இதையொட்டி  டிசம்பர் 22- ஆம் தேதி இரவு சென்னை பி.வி.ஆர்.( சத்யம்) தியேட்டரில் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி  நடந்தது.

இந்நிகழ்வில் பேசியோர்….

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

வசனகர்த்தா ஆர். பி  பாலா “இந்தப்படத்தில் பணியாற்றியது மிகப்பெரிய பாக்கியம். மோகன்லால் சாருடன் பணிபுரிந்த பிறகு தான், எனக்கு ஒரு அடையாளம் கிடைத்தது. எனது வாழ்க்கையைப் புலி முருகனுக்கு முன்னால், பின்னால் என்றே சொல்லலாம். அவரில்லாமல் நான் இல்லை”.

'பரோஸ்' திரைப்படம்
‘பரோஸ்’ திரைப்படம்

Admission Enquiry Form

இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம்

“மோகன்லால் சார் இயக்கும் முதல் படத்தில் நான் இசையமைப்பாளராக அறிமுகமாவது மகிழ்ச்சி. 2019ல் அமெரிக்காவில் ஒரு போட்டியில் வெற்றிபெற்று வந்த பிறகு, முதல் ஆளாக மோகன்லால் சார் தான் வாழ்த்தினார். பின்னர் இந்தப்படம் பற்றிச் சொல்லி, இசையமைக்க வேண்டும் என்றார். எனக்கு முழு ஆதரவாக இருந்த மோகன்லால் சாருக்கு நன்றி. கண்டிப்பாக இப்படம் உங்களை ஆச்சரியப்படுத்தும்”..

கிரியேட்டிவ் ஹெட் ராஜிவ் குமார்

“நான் இந்தப் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து வேலை பார்த்தது எதேச்சையான ஒரு அதிசயம். இந்தியாவின் முதல் 3டி படமான ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ படத்தில் நான் உதவி இயக்குநராக பணியாற்றினேன். இத்தனை வருடங்கள் கழித்து, முழுமையான 3டி படத்தில் மோகன்லாலுடன் இணைந்து வேலை பார்த்தது மகிழ்ச்சி. அவர் எப்போதும் எனக்கு இனிய நண்பராக இருந்து வருகிறார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மோகன்லால் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் கலக்கியிருக்கிறார். முக்கியமாக டெக்னாலஜிக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். நிறைய டெக்னாலஜியைத்தாண்டி நடிகர்களின் நடிப்பு தான் உங்களைக் கவரும். இந்தப்படம் பார்க்கும் போது நீங்கள் 3டி என்பதை மறந்து விடுவீர்கள்.இப்படம் மிக அர்ப்பணிப்புடன் மிகப்பெரிய உழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது, கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் கவரும்”.

ஹீரோ & இயக்குநர் மோகன்லால்

“47 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். இயக்குநராக என் முதல் படம்இது. எப்படி இது நடந்தது? என எல்லோரும் கேட்டார்கள். இது அதுவாகவே நடந்தது, அவ்வளவு தான். இது ஒரு ஃபேண்டஸி, அட்வெஞ்சர் படம். முழுக்க 3டியில், இரண்டு கண்களில் பார்ப்பது போல, இரண்டு கேமராவை வைத்து, படம்பிடித்துள்ளோம். அதை எடிட் செய்து நீங்கள் பார்க்கும் போது, புது அனுபவமாக இருக்கும். இப்படத்தில் மிக முக்கியமான திறமையான கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.

மோகன்லால்உலகின் சிறந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன்  பணியாற்றியுள்ளார். ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான் ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். மிகச்சிறந்த கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். லிடியன் முதன் முதலில் எங்களைப் பார்க்க வந்த போது 13 வயது தான், மிகச்சிறந்த இசையைத் தந்துள்ளார். இரண்டு நடிகர்கள் தான் இந்தியா.  மற்றவர்கள் எல்லோரும் போர்ச்சுகல், ஸ்பெயின், க்ரீஸ், ரஷ்யா என நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர்.

பிரிட்டிஷ் குழந்தை தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. படத்தின் கதைப்படி ஒரு இன்னொசன்ஸான, இளமையான இசை வேண்டும் என்பதால் தான், லிடியனை அழைத்தேன். இப்படத்தில் பெரும் துணையாக இருந்த ராஜிவ் குமாருக்கு நன்றி. இப்போது கூட வேலை நடந்து வருகிறது. மிகப்பெரிய உழைப்பைத் தந்திருக்கோம்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வசனகர்த்தாபாலாவும் மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். உங்களுக்குள் இருக்கும் குழந்தை மனதை இப்படம் எழுப்பி விடும். அனைவரும் ரசிப்பீர்கள். இப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்”.

‘டீப் ப்ளூ சீ 3’, ‘ஐ இன் தி ஸ்கை’ மற்றும் ‘பிட்ச் பெர்பெக்ட்’ ஆகிய படங்களில் பணியாற்றிய பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், ‘பரோஸ்’ படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ரிலீஸ் ஆகிறது ‘பரோஸ்’.

 

—  மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.