அங்குசம் பார்வையில் ‘பிபி 180’
தயாரிப்பு:’ ரேடியண்ட் இண்டெர்நேஷனல் பிலிம்ஸ் & ‘அதுல் இந்தியா’ பிரதீக் டி.சாட்பர், அதுல் பொஸமியா. டைரக்டர்: ஜேபி. ஆர்டிஸ்ட்: தான்யா ரவிச்சந்திரன், டேனியல் பாலாஜி, நயனா சாய், அருள்தாஸ், இயக்குனர் தமிழ், ஸ்வேதா டோரத்தி, ஜாக் அருணாசலம். ஒளிப்பதிவு: ராமலிங்கம், இசை: ஜிப்ரான் வைபோதா, எடிட்டிங்: இளையராஜா சேகர், ஸ்டண்ட்: ராம்குமார், ஆர்ட் டைரக்டர்: அருண்குமார், தமிழ்நாடு ரிலீஸ்: உத்ரா புரொடக்சன்ஸ், பி.ஆர்.ஓ: சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல்நாசர்.
சென்னை காசிமேடு ஏரியாவில் பவர்ஃபுல் தாதா [ ஆரம்பத்துலேயே ஆரம்பிச்சுட்டாய்ங்க] அர்னால்டு [ டேனியல் பாலாஜி]. இவரைப் போட்டுத்தள்ள ஆப்போசிட் தாதா கும்பல் முயற்சிக்கிறது. அப்ப அஞ்சேமுக்கால் அடி அரிவாளைத் தூக்கி அம்புட்டுப் பேரையும் போட்ட்டுத் தள்ளுகிறார். இப்படியே வரிசையாக பலரை பொலி போடுகிறார்.

பென்னேரி[ [பொன்னேரின்னு சொல்ல வேண்டியது தானே டைரக்டரே] அரசு மருத்துவமனையில் டாக்டராக இருக்கிறார் தான்யா ரவிச்சந்திரன். இன்னொரு டாக்டராக இருக்கும் நயனா சாயும் இவரும் நெருங்கிய தோழிகள். இருவரும் ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் போகிறார்கள், வருகிறார்கள். இடையிடையே அருள்தாஸும் டேனியல் பாலாஜியுடன் சேர்ந்து பலிவேட்டை நடத்துகிறார். இப்படியே இடைவேளை வரைக்கும் போச்சு. கதை என்னாச்சுன்னு நாம யோசிச்சு…யோசிச்சு… நமக்கு பிபி 180-க்கு மேல எகிறிருச்சு.
வெளியே டீ சாப்பிட்டு பிபியை கொஞ்சம் குறைச்சுக்கிட்டு, ரிலாக்ஸாகி மீண்டும் தியேட்டருக்குள்ள போனோம். அப்ப தான் லைட்டா கதைய ஆரம்பிச்சாரு டைரக்டர். அதாவது டேனியல் பாலாஜியை வளர்த்த கே.பாக்யராஜின் பதினெட்டு வயது மகள் சாலை விபத்தில் மரணமடைகிறார். மகளின் உடலை போஸ்ட்மார்டம் பண்ணாமல் வாங்கித் தர, டேனியல் பாலாஜியிடம் மன்றாடுகிறார் கே.பாக்யராஜ். டேனியலும் அருள்தாஸும் எவ்வளவோ மிரட்டியும் அடிபணிய மறுக்கிறார் அரசு டாக்டராக இருக்கும் தான்யா ரவிச்சந்திரன்.
இதான் கதைன்னு நமக்கு புரிஞ்சதும் தான் நிம்மதிப் பெருமூச்சு வந்துச்சு. படம் முழுக்க பக்கா ரவுடியாக ராவடி பண்ணுகிறார் டேனியல் பாலாஜி. திடீர்னு திருச்சிக்குப் போய் ரெண்டு பேரை போட்டுத் தள்ளுகிறார். சாவகாசமாக திரும்பி வருகிறார். இவரின் எல்லா அக்கிரமங்களுக்கும் போலீஸ் துணை இருக்கு. ஆனால் கமிஷனர் தமிழ் “நீயெல்லாம் ஒரு ஆளாடா? அந்த லேடி டாக்டரை இனிமே மிரட்டுனா நெத்தில பொட்டு வச்சுருவேன்” கமிஷனர் ஆபீசில் போலீஸ் படையை உள்ளே வரவைத்து மிரட்டும் சீனிலும் டேனியலையும் அருள்தாஸையும் ரோட்டில் வழிமறித்து கமிஷனர் ஆபீசுக்கு கொண்டு போகும் சீனிலும் போலீஸ் டிபார்ட்மெண்டின் கெத்தைக் காட்டியிருக்கார் டைரக்டர்.

தான்யா ரவிச்சந்திரன் தான் படத்தின் பெரும்பலம். ‘சரியான ஆம்பளயா இருந்தா நேர்ல வாடா” என டேனியல் பாலாஜியிடம் போனில் ஆவேசம் காட்டுவது, நயனா சாயிடம் காட்டும் சினேகம், இன்னொரு ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக இருக்கும் ஸ்வேதா டோரத்திக்கு நேர்ந்த அவமானத்திற்குப் பிறகு டேனியலைத் தூக்க ஸ்கெட்ச் போடும் சீன் என தான்யா செம ஜோர்யா…..
மார்ச்சுவரியில் மகள் பிணத்தைப் பார்த்து ‘நாயகன்’ வேலு நாயக்கர் ரேஞ்சுக்கு கே.பாக்யராஜ் கதறிக்கதறி அழுவதைப் பார்த்து நமக்கு பதறிப்போச்சு. வரலேன்னா விட்ருங்கண்ணே…
போஸ்ட்மார்டம் பண்ணக்கூடாதுன்னு மிரட்டும் டேனியல் பாலாஜிக்கு அதே போஸ்ட்மார்டம் ட்ரீட் கொடுத்து ஷாக் கொடுப்பது தான் இந்த பிபி 180-யின் க்ளைமாக்ஸ் ஹைலைட். வழக்கம் போல் மியூசிக் டைரக்டர் ஜிப்ரான் சிறந்த பங்களிப்பைக் கொடுத்துள்ளார். எடிட்டிங் தான் ரொம்ப குழப்பாமகிருச்சு. நைட் சீன் நடந்துக்கிட்டிருக்கும் போதே பகல் சீன் வருது. பகல் சீன் நடக்கும் போது நைட்சீன் வருது.
இது ஒரு டைப்பான சினிமா தான். ஆனா எல்லாருக்கும் பிடிச்ச சினிமாவா இருக்குமான்னு தெரியல?
— ஜெ.டி.ஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.