சிறந்த தமிழ் இயக்குனர்கள் – மௌலி மற்றும் விசு ! ஏன் தெரியுமா ?
மௌலி மற்றும் விசு…சிறந்த தமிழ் இயக்குனர்கள்… மன்னன்னு ஒரு படம். அதுல நாயகி ஒரு திமிர்ப்பிடிச்ச பொண்ணு. அந்தப்பொண்ணோட அப்பா விசு. பிஸ்தான்னு ஒரு படம். அதுல நாயகி பணக்காரத்திமிர் பிடிச்ச பொண்ணு. அதுல நாயகியோட அப்பா மௌலி. இப்படி இரண்டு பேருமே நிறைய விஷயங்களில் ஒரே மாதிரி இருப்பது ஆச்சர்யமான விஷயம்.
விசு, மௌலி இருவருமே நாடகத்தில் இருந்து வந்தவர்கள்….நாடகம் தான் அவர்களின் முதல் சொத்து…பிறகுதான் சினிமா…இவர் மணலை கயிறாக திரிப்பார். அவர் புல்லாங்குழலால் அடுப்பு ஊதுவார். இருவருமே சிறந்த திரைக்கதை ஆசிரியர்கள்….குடும்ப வாழ்க்கையை கதைகளில் ஒருவர் சீரியஸாக அணுகினால் மற்றவர் காமெடியாக அணுகுவார்…
மௌலி பள்ளி காலத்திலிருந்து கிரிக்கெட் விளையாடக் கூடியவர்…..அவர் விசுவின் தம்பி கிஷ்முவின் பள்ளி தோழன்….ஆனால் அலைவரிசை ஒத்துப் போனது என்னவோ கிஷ்மூவின் அண்ணன் விசுவோடு தான்…மௌலி கிரிக்கெட் கேம் விளையாட பணம் தேவைப்பட இசை நிகழ்ச்சி நடத்த முடிவெடுத்தார்கள். அது முடிந்ததோ நாடகம் நடத்த எனும் முடிவில்..தொடக்கத்தில் நாடகம் போட ஸ்ரீதரின் ரத்தப் பாசம் நாடகத்தை வாங்கி அதை நாடகமாகப் போட்டனர் .அது தொடரமுடியாமல் அப்படி நாடகம் எழுதி தீர்மானித்து மௌலி எழுதத்தொடங்கினார்.
விசு வேலை செய்த ட்ராவல் ஏஜன்சியில் விசுவை பாஸஞ்சர்களை ரிஸீவ் செய்ய ஏர்போர்ட்டுக்கு அனுப்புகிறார்கள். விசுவோடு ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து கொண்டு மௌலியும் பயணித்து ஏர்போர்ட் லவுஞ்சில் உட்கார்ந்திருக்கிறார் மௌலி. அப்போது அவர் பார்த்த ஆட்களின் பாவனைகளை பார்த்து மௌலி எழுதிய முதல் நாடகம் தான் ஃப்ளைட் 172. அதன் வெற்றியின் மூலம் சிறந்த நாடகாசிரியராகிறார் மௌலி.
இதன் பின்னால் நடிகை சச்சு ஒரு முறை தனக்காக ஒரு நாடகம் எழுதி கேட்க, மௌலியின் வேலை, நாடக நடிப்பு போன்ற பிஸிக்கிடையில் எழுத முடியாமல் கதையை மட்டும் சொல்லி விசுவை எழுதச்சொல்கிறார். அப்படி விசு எழுதிய நாடகம் ஹிட்டாக விசு தன் அண்ணன் ராஜாமணி, தம்பி கிஷ்மு மற்றும் நண்பர்களோடு நாடகக்கம்பெனி தொடங்குகிறார்.
இரு பெரும் நாடகக்கதாசிரியர்கள் தங்களை அறியாமல் மற்றவர்களின் வளர்ச்சிக்கு காரணமாகிறார்கள். பின் இருவருமே பாலச்சந்தரிடம் கற்று விசு தமிழ் சினிமாவிலும், மௌலி தெலுங்கு சினிமாவிலும் அசைக்க முடியாத நம்பிக்கையை பெறுகிறார்கள்.
விசு ஏற்றெடுத்த பாத்திரங்களும்,அதேப்போல் மௌலி நடித்த பாத்திரங்களும் தமிழ் சினிமாவில் அப்போது மறக்க முடியாதவை. இயக்குனர் மகேந்திரன் ‘ஹிட்லர் உமாநாத்’ என்கிற கதையை எழுதினார். அதன் திரைக்கதை, வசனத்தை எழுதியவர் மௌலி. இந்தப்படத்தை தெலுங்கில் சில மாற்றங்கள் செய்து ரீமேக் செய்தார்கள். ‘தர்மாத்முடு’ என்கிற அப்படம் தெலுங்கில் நன்றாக ஓடியது.
அந்தக்கதையை ஏவிஎம் வாங்கி ஒரு இயக்குனரை அழைத்துக்காட்ட அவரும் “நல்ல கதை. சில மாற்றங்கள் செய்தால் வெற்றி நிச்சயம்” எனச்சொல்ல நீங்களே திரைக்கதை, வசனம் எழுதுங்கள் எனச்சொல்ல அவரே எழுதி அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட். அப்படம் நல்லவனுக்கு நல்லவன். அதை எழுதியது விசுவே தான்.
மௌலியால் எழுத அழைக்கப்பட்டு மௌலியின் தோல்வியடைந்த திரைக்கதையை வெற்றித்திரைக்கதையாக மாற்ற விசுவால் முடிந்தது தான் காலம் இரண்டு நண்பர்களிடம் செய்த ஆச்சர்யம்…. விசு-மௌலி இனிமேல் தமிழ்த்திரையில் கிடைக்க முடியாத ஆசான்கள்…
செல்வன்அன்பு
டிஜிட்டல் படைப்பாளி