ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட போலீஸ் ? வாழ்வதா? சாவதா? உதவி கேட்டு பெண் போலீஸ் கதறல் !

0

ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட கந்திலி போலீஸ் ? உதவி கேட்டு பெண் போலீஸ் கதறல் ! போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதால், மன உளைச்சலில் வாழ்வதா? சாவதா? என தெரியவில்லை என்று மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் போலீஸ் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

திருப்பத்தூர் அடுத்த பெரிய கசிநாயக்கன்பட்டி வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன் மற்றும் திருஞானம். அண்ணன், தம்பிகள் இருவருக்கும் பூர்விக சொத்தில்  நீண்ட காலமாக வழி பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது

கலைஞர் பிறந்தநாள்

கலைஞர் பிறந்தநாள்

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை பிரச்னைக்குரிய நிலத்தில் டிராக்டரைக் கொண்டு திருஞானம்  உழுது கொண்டிருந்த போது  அவரின் தம்பி வெங்கடேசனுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டு  ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் திருஞானம் மற்றும் அவருடைய மனைவி தனலட்சுமி மற்றும் வெங்கடேசன் மகன் நந்தகுமார் ஆகியோர்  திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்

இதன் காரணமாக திருஞானம், வெங்கடேசன் இருவரும் தனித்தனியே கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர் இந்நிலையில், திருஞானம் கொடுத்த புகாரின் பேரில் வெங்கடேசனை மட்டும் கந்திலி காவல்துறையினர் கைது செய்திருந்த  நிலையில் டெல்லி மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் காவலராக பணிபுரிந்து வரும் வெங்கடேசனின் மகள் பூங்கொடி,ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்த கந்திலி  காவல்துறையினருக்கு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி சமூக வலைத்தளங்களில்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

வீடியோ லிங்

4 bismi svs

அந்த வீடியோவில் ” அய்யா வணக்கம் எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என் அப்பா அம்மாதான் பார்த்துக் கொள்கிறார்கள்  , எங்கள் குடும்பத்திற்கும் சித்தப்பா குடும்பத்திற்கும் நிலப்பிரச்சனை உள்ளது, எங்கள் சித்தப்பா எங்களை ஏமாத்திட்டாரு கந்திலி போலீஸ் ஸ்டேஷனில் கம்பளைண்ட் கொடுத்தோம் நடவடிக்கை எடுக்கவில்லை.

நிலத் தகராறில் அடிப்பட்டு ஆஸ்பிட்டலில் படுத்து இருக்கும் என் அப்பாவை இரவோடு இரவாக போலீஸ் கைது செய்துள்ளனர் , என தம்பியை சித்தப்பா பெண் செருப்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார் இந்த சம்பவம் ஆஸ்பிட்டல் சிசிடிவி கேமராவில் பதிவு ஆகி இருக்கும்,  சர்வேயிரும் என் நிலத்தை அளந்து கொடுத்து சித்தப்பாவுக்குதான் சாதகமாக உள்ளார் , இந்த பிரச்சனை காரணமாக எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது .

என்னால் போலீஸ் டியூட்டி பாரக்க முடியவில்லை ,  நான் வாழ்வதா, சாவதா என தெரியவில்லை”  தயவு செய்து நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என ஒரு பெண் போலீஸே உதவி கேட்டு சமூக வலைத்தளங்களில் வெளியீட்ட  வீடியோ காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.

மணிகண்டன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.