பாரதி – வள்ளுவர் உருவங்களை வரையச் செய்தவர் பாரதிதாசன் – செந்தலை கவுதமன்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சியில் புரட்சிப் பாவேந்தர் பேரவை தொடக்க விழா – பாரதி – வள்ளுவர் உருவங்களை வரையச் செய்தவர் பாரதிதாசன் – செந்தலை கவுதமன் – திருச்சி தமிழ்ச்சங்கத்தில் 22.09.2024ஆம் நாள் ஞாயிறு மாலை புரட்சிப் பாவேந்தர் தொடக்கவிழா நடைபெற்றது. இவ் விழாவிற்குப் பாவாணர் தமிழியக்கம் சார்ந்த பேராசிரியர் முனைவர் கு.திருமாறன் தலைமை தாங்கினார். பேராசிரியர் முனைவர் சு.செயலாபதி வரவேற்புரையாற்றினார். பேரவையின் நோக்கம் குறித்துப் பாவலர் குறள்மொழி உரையாற்றினார். தமிழக அரசின் பாரதிதாசன் விருதாளர் புலவர் செந்தலை ந.கவுதமன் சிறப்புரையாற்றினார்.

செந்தலை கவுதமன் உரையாற்றுகின்றார்
செந்தலை கவுதமன் உரையாற்றுகின்றார்

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

விழாவில் தூய வளனார் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ.இராசாத்தி, தமிழ்ச்சங்க அமைச்சர் பெ.உதயகுமார், தமிழ்மாமணி பேராசிரியர் ப.சுப்பிரமணியம் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்க்காவிரி ஆசிரியர் வழக்கறிஞர் தமிழகன் நன்றியுரையாற்றினார். விழா நிகழ்ச்சிகளைப் பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் தொகுத்து வழங்கினார்.

விழாவில் சிறப்புரையாற்றிய செந்தலை கவுதமன்,“திருச்சியில் எல்லாத் தலைவர்களுக்கும் பேரவைகள், மன்றங்கள் இருக்கின்றன. ஆனால் பாவேந்தர் பாரதிதாசனுக்குப் பேரவை இல்லையே என்ற குறையைப் போக்க, பாவலர் குறள்மொழி, பேராசிரியர் சு.செயலாபதி, நொச்சியம் ச.சண்முகநாதன் ஆகியோர் முன்முயற்சியில் இந்தப் புரட்சிப் பாவேந்தர் பேரவை தொடங்கப்பட்டுள்ளது உண்மையில் மகிழ்ச்சிக்குரியதாகும்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

விழாவில் நா.வை.சிவம். பெரியார் விருதாளர் நெடுஞ்செழியன் சிறப்பு செய்யப்பட்டனர்
விழாவில் நா.வை.சிவம். பெரியார் விருதாளர் நெடுஞ்செழியன் சிறப்பு செய்யப்பட்டனர்

பாவேந்தர் 73 ஆண்டு காலம் வாழ்ந்த அவர் எழுதிய கவிதைகள் பல இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்றால் அது மிகையில்லா உண்மையாகும். திருச்சியில் உள்ள இந்தத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் படம் உள்ளது. இதைக் கொடுத்தது பாரதிதாசன் என்பது யாருக்குத் தெரியும்? திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கவேண்டும் என்று முனைந்தவர் பாரதிதாசன். அதன் விளைவாக மயிலாடுதுறை மதீனா விடுதியில் வேணுகோபால் சர்மா பாரதிதாசன் வழிகாட்டலில் திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்தார். பாரதிதாசன் சொன்ன அத்தனை திருத்தங்களையும் ஏற்றுக்கொண்டு சர்மா வரைந்து கொடுத்தார். அந்த ஓவியம்தான் தற்போது தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வத் திருவள்ளுவர் படமாக ஏற்கப்பட்டுள்ளது.

பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் புதுவையில் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. பாரதியின் ஒல்லியான உருவத்தைக் கோட் போட்டுப் புகைப்படம் எடுக்கச் சொன்னவர் பாரதிதாசன். அவருக்கு அந்தப் படம் மனநிறைவைத் தரவில்லை. பாரதிதாசன் பாரதியின் முகத்தைப் பெரிதாக வரைந்து தலையில் முண்டாசு கட்டியும் வரைந்தார். அதில் பாரதி கொஞ்சம் குண்டாக இருப்பதுபோல் தோன்றும்.

விழாவில் கலந்துகொண்ட சான்றோர்கள்
விழாவில் கலந்துகொண்ட சான்றோர்கள்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அந்தப் படம்தான் நாம் தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் பாரதியின் படம். இதை வரைந்து கொடுத்தவர் பாரதிதாசன். பாரதியின் மீது பாரதிதாசன் கொண்டிருந்த பற்றின் காரணமாக, தனக்குப் பிறந்த பெண் குழந்தைக்குப் பாரதி என்று பெயர் வைக்க முனைந்தார். அந்தப் பெயரை விடுத்துச் சரஸ்வதி என்று பெயர் சூட்டினார். பாரதியின் நினைவாகத்தான் சரஸ்வதி என்னும் பெயரைச் சூட்டினார். பாரதிதாசன் பாரதியின் பல கவிதைகளைப் பல இடங்களில் பேசிப் பாரதியின் கவிதைகளைப் பொதுமக்களிடம் அறிமுகம் செய்தார்.

திருச்சிக்கும் பாரதிதாசனுக்கும் பெரிய தொடர்பு உண்டு. திருச்சியில்தான் பாரதிதாசனின் 60ஆவது மணிவிழா நடைபெற்றது. பள்ளி ஆசிரியராக இருந்து தமிழ்நாட்டின் புரட்சிக் கவிஞராகப் பாரதிதாசன் உயர்ந்தார். பாரதி பேசாத பெண் விடுதலை, விதவை மறுமணம், மூடநம்பிக்கை ஒழிப்பு, சமத்துவம் குறித்துப் பாரதிதாசன் கவிதைகளில் பேசிப் பாரதிக்குத் தான் உண்மையில் தாசன்தான் என்பதை உறுதி செய்தார்.

விழாவில் கலந்துகொண்ட சான்றோர்கள்
விழாவில் கலந்துகொண்ட சான்றோர்கள்

அதனால்தான் திருச்சியில் அவர் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் இங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. திருச்சி வாழ் பெருமக்கள் இதைப் பெருமையாகவே எண்ணிக்கொள்ளலாம். பாரதிதாசன் தன் இறுதிகாலத்தில் உடல் நலம் குன்றிப் பாண்டிச்சேரி பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்குப் படுக்கக் கட்டில் கொடுக்கப்படவில்லை. தரையில் படுத்துக்கொண்டுதான் சிகிச்சை பெற்றார். அப்போது அவர் 80ரூபாய் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருந்தார். ரூ100/- ஓய்வூதியம் பெற்றால்தான் சிறப்பு படுக்கை வசதி அளிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் சொல்லியது.

பின்னர்ச் சென்னை பொதுமருத்துவமனையில் பாரதிதாசன் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இயற்கை எய்தினார். பாரதிதாசன் மறைந்தாலும், தன் வீரியமிக்க கவிதைகளால் பாரதிதாசன் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் பெயரால் தொடங்கப்பட்டுள்ள இப் பேரவை மொழி உணர்வையும், இன உணர்வையும் முன்னெடுத்துச் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று உரையை நிறைவு செய்தார். விழாவில், திருச்சியில் செயல்பட்டு வரும் தமிழ் அமைப்புகளுக்கும் சான்றோர்களுக்கும் செந்தலை கவுதமன் சிறப்பு செய்தார்.

தமிழ்ச்செம்மல் வீ.கோவிந்தசாமி சிறப்பு பெற்றார்
தமிழ்ச்செம்மல் வீ.கோவிந்தசாமி சிறப்பு பெற்றார்

சிறப்பு பெற்றவர்களின் விவரங்கள்: பாவேந்தம் பதிப்பாளர் முனைவர் க.தமிழகன், பாவேந்தர் பதிப்பகம் ஆ.இளங்கோவன், திருக்குறள் பயிற்றகம் மணற்பாறை நா.வை.சிவம், திருக்குறள் கல்வி மையம் சு.முருகானந்தம், பெரியார் விருது பெற்ற முனைவர் தி.நெடுஞ்செழியன், கோவிந்தம்மாள் தமிழ்மன்றத் தலைவர் தமிழ்ச்செம்மல் வீ.கோவிந்தசாமி, சிரா இலக்கியக் கழகம் தலைவர் முனைவர் ஸ்ரீராம், திருச்சிராப்பள்ளி செம்மொழி மன்றம் நிறுவுநர் முனைவர் திருக்குறள் தாமரை, திருச்சி முத்தமிழ்ச் சங்க நிறுவுநர் கவிஞர் செ.சக்திவேல், நாளை விடியும் இதழாசிரியர் பெ.இர.அரசெழிலன், தமிழ்க்காவிரி இதழ் ஆசிரியர் தமிழகன், மக்கள் மருத்துவர் அரும்பாவூர் கோபால் முதலானோர் விழாவில் சிறப்பு செய்யப்பட்டனர்.

நெடுஞ்செழியன் சிறப்பு செய்யப்பட்டனர்
நெடுஞ்செழியன் சிறப்பு செய்யப்பட்டனர்

விழாவின் தொடக்கத்தில் இசையரங்கில் கலந்துகொண்டு பாரதிதாசன் கவிதைகளை இசையோடு பாடிய தமிழ் பண்ணன் ஈகவரசன், புதுகை தயாளன் ஆகியோர் விழாவில் சிறப்பிக்கப்பட்டனர். திருச்சியின் பல்வேறு தமிழ் அமைப்புகளின் சார்பில் தமிழ்ச்சான்றோர், கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர் எனச் சுமார் 250 பேர் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.