ஆர்த்தியின் அதிரடி ! ‘ஜெயம்’ ரவியின் எதிரடி!
நடிகர் ‘ஜெயம்’ ரவி—ஆர்த்தி தம்பதிகளின் விவாகரத்து விசயத்தில் சீனியர் நடிகையும் பா.ஜ.க.பிரமுகருமான குஷ்பு, ஆர்த்திக்கு ஆதரவாக களத்தில் குதித்து, “மனைவியைப் பிரிபவன் மனுசனே இல்லை, வாழவும் தகுதியில்லை” என அனலைக் கக்கினார். ஆர்த்தியின் அம்மா சுஜாதாவின் நெருங்கிய தோழியான குஷ்புவின் கோபாவேசத்திற்கு எதிரடியாக, ‘ஜெயம்’ ரவி, இப்போது ஆர்த்தி மீது சென்னை அடையாறு துணை கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.
‘ஆர்த்தியின் வீட்டில் தனது மதிப்புமிகு உடைமைகள் இருப்பதாகவும் அதை எடுக்கப் போன போது, ஆர்த்தியும் அவரது அம்மாவும் தன்னை மிரட்டி அனுப்பியதாகவும்’ புகாரில் கூறியுள்ளார் ஜெயம் ரவி.
இன்னும் சில நாட்களில், சுஜாதாவின் நெருங்கிய சினிமாத் தோழிகள் சிலர் மூலம் ஜெயம் ரவி மீது பல டிசைன்களில் அட்டாக் அம்புகள் பாயலாம். ஏன்னா அவ்வளவு சீக்கிரத்தில் ஜெயம் ரவிக்கு விவாகரத்து கொடுத்துவிடக்கூடாது என்பதில் ஆர்த்தியும் அவரது அம்மா சுஜாதாவும் பக்கா ப்ளானுடன் களத்தில் குதித்திருக்கிறார்கள்.