’ஐ ஆம் கேம்’ ஷூட்டிங் ஓவர்!
‘லோகா’ படத்தின் சூப்பர்ஹிட்டுக்குப் பின் துல்கர் சல்மான் தனது ‘வேஃபேரெர் பிலிம்ஸ்’ பேனரில் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் ‘ஐ ஆம் கேம்’ படத்தின் ஷூட்டிங் 156 நாட்களில் தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் நடந்து முடிந்துள்ளது. சமீபகால மலையாள சினிமாக்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தினை ஜோம் வர்கீஸுடன் இணைந்து தயாரித்துள்ளார் துல்கர் சல்மான். மெகா ஹிட்டான ‘ஆர்டிஎக்ஸ்’-ஐ டைரக்ட் பண்ணிய நஹாஸ் ஹிதாயத் தான் ‘ஐ ஆம் கேம்’-ன் டைரக்டர்.
வரும் ஆகஸ்டில் ரிலீசாகும் இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், டைரக்டர் மிஷ்கின், கயாது லோஹர், கதிர், சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : ஜிம்ஸி காலித், இசை : ஜேக்ஸ் பிஜாய், எடிட்டிங் : சமன் சாக்கோ, ஸ்டண்ட் : அன்பறிவ், பி.ஆர்.ஓ. : யுவராஜ்.
— ஆண்டவர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.