செயின்ட ஜோசப் கல்லூரியில் – தேசிய ஊட்டச்சத்து மாதக் கொண்டாட்டம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மத்திய கல்வி அமைச்சகத்தின் உன்னத் பாரத் அபியான் 2.0 திட்டத்தின் கீழ் செயின்ட ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட  சேவைகள்  மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டி இணைந்து தேசிய ஊட்டச்சத்து மாதக் கொண்டாட்டம் – 25.09.2024 கல்லூரி வளாத்திலுள்ள ஏவி அரங்கத்தில் நடைபெற்றது தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலர் அருள் முனைவர் அமல் சே ச கல்லூரி மாணவ, மாணவிகள் உடல் நலம் பேண ஊட்டசத்துகளை பற்றி நன்கு  அறிந்து  கொண்டு வளரிளம் பருவத்தில் உட்கொண்டால் தான் நம் உடல் சீரான வளர்ச்சி பெறுவதுடன் உடல்நலத்துடன் வாழ முடியம்  என்று கூறி அரசு நல அமைப்பான ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட சேவைகளுடன் எமது கல்லூரி இணைந்து இந்நிகழ்ச்சியை கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சி என  தனது தலைமை உரையில் கூறினார் .

விரிவாக்கத்துறை செப்பர்டு இயக்குநர் அருள்முனைவர்  சகாயராஜ் சே ச தனது தொடக்கவுரையில் பாரம்பரிய உணவுகள் மிகவும் மகத்துவமானது மருத்துவ குணம் கொண்டது துரித உணவுகளையும் குளிர் சாதன பெட்டிகளில் அடைக்கப்பட்ட  தவிர்த்து அதனை மாணவ, மாணவிகள் கடை பிடித்து செப்பர்டு சேவை  செய்யக்கூடிய பகுதிகளில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று கூறினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டியின் துணை ஆளுநர் ரொட்டேரியன் சபாபதி துரித உணவுகளுக்கு பதிலாக இயற்கை உணவுகளை உட்கொள்வதால் என்றும் இளமையுடனும் எந்த நோய்களும் வராமல் நம்மை பாதுகாத்துகொள்ள இந்நிகழ்ச்சி நமக்கு உறுதுணையாக உள்ளது என தனது வாழ்த்துரையில் கூறினார்.

உயிர் வேதியியல் துறை, துறைத்தலைவர் பெனோ சூசை விஜயகுமார் மற்றும் திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் வட்டம் திட்டம் -2ன் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் கௌசல்யா ஆகியோர் உடல் உறுப்புகளின் பணிகளும் உடலின் உறுப்புகளுக்கான உயிர் வேதிப் பொருட்களின் முக்கியத்துவத்தையும் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் தாதுச்சத்துகள் ஊட்டச்சத்துக்களில் எதிர்ப்பு சக்திகள் உள்ளன என்றும் உயிர் வேதியலின்படி நம் உடலுக்கு தேவையான சத்துகளை பெற சத்தான உணவுகளை தகுந்த உகந்த நேரங்களில் உட்கொள்ள வேண்டும் என்று தங்களது கருத்துரையில் விளக்கமளித்தார்கள்.

விரிவாக்கத்துறை செப்பர்டு ஒருங்கிணைப்பாளர் லெனின் வந்தவர்களை வரவேற்றார் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட வட்டார தவைவி அர்ச்சனா நன்றியுரை வழங்கினார் விரிவாக்கத்துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயசந்திரன் விஜயகுமார் இளநிலை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயசீலன் யசோதை மற்றும் அலுவலக பணியாளர் அமலேஸ்வரன் ஆகியோர் இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார்கள் கல்லூரி மாணவ மாணவியர்கள் 157 பேரும் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 35 பேரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் முருங்கை சூப் கொண்டை கடலை சத்துமிக்க தினை வகைகள் பாயசங்கள் மற்றும் சிறுதானிய உணவு கலவைகள் வழங்கப்பட்டன மேலும் ஊட்டச்சத்து பற்றிய கண்காட்சியும் ஊட்டச்சத்து உணவுகளும் இடம் பெற்றன இறுதியில் ஊட்டச்சத்து மாத உறுதி மொழி எடுத்து கொண்டார்கள்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.