அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கரிச்சான் குருவிகளா … பறவைகள் பலவிதம்-தொடா்-24

திருச்சியில் அடகு நகையை விற்க

கரிச்சானை போன்று ஒரு தைரியசாலியை நான் பார்த்ததில்லை. கரிச்சான் குருவி உருவத்தில் சிறியதாக இருந்தாலும், அதை விட உருவத்தில் பெரிய பறவைகள் காகம், பருந்து போன்றவற்றை ஓட ஓட விரட்டும்.

உருவத்தில் சிறியவனாக இருந்தாலும் உள்ளத்தில் உரம் இருந்தால் உன்னைவிட பலசாலியான எதிரியையும் ஓட ஓட உன்னால் விரட்ட முடியும் என்பதை நாம் இப்பறவையின் மூலம் உணரமுடியும்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இவனுக்கு பயம் என்பதே கிடையாது. தன்னைவிட பெரிதான காகம், கழுகு போன்றவற்றைத் துரத்தித் துரத்தி விரட்டுவதைப் பார்க்கலாம். இந்தக் காட்சி பார்க்க வேடிக்கையான ஒன்று. மின் கம்பிகள் மீதும் மாட்டின் மீதும் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கலாம். அவ்வப்போது சிறிது தூரம் பறந்து சென்று பூச்சிபிடித்து பின் பழைய இடத்திற்கே திரும்புவதையும் காண முடியும்.

அதிகாலையிலேயே கீச்சு கீச்சு என்று இனிமையாக ஒலி எழுப்புவான். பசுக்கள் மேயும் இடத்தில் பசுக்கள் மீது ஏறி சவாரி செய்வது பார்க்வேண்டிய ஒரு காட்சி.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

கரிச்சான் குருவிகளா …மாட்டுக்காரன், இரட்டைவால் குருவி, கருவாட்டு வாலி, வால் நீண்ட கருங்குருவி என்றெல்லாம் அழைக்கப்படும் இவனை இலக்கியங்களில் ஆனைசாத்தன் எனக் குறிப்பிட்டுள்ளனர். கரிச்சான் குருவியை Black Drongo என ஆங்கிலத்தில் அழைப்பர். இன்னும் இந்த பறவையைப் பற்றி செல்லிக்கொண்டே போகலாம்.

மனிதர்கள் மிமிக்ரி செய்வது போல், கரிச்சான் குருவி அதன் குரலைத் தவிர வேறு சில பறவைகளைப் போல் குரலெழுப்பும் திறமை படைத்தது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தனது எல்லைக்குள் வரும் எத்தனை பெரிய பறவையானாலும் விரட்டியடிக்கும் குணம் கொண்டது கரிச்சான்.இதனால்,வலிமை குறைந்த பறவைகளான புறாக்கள், தவிட்டுக்குருவிகள், கொண்டைக்குருவிகள் போன்றவை கரிச்சான்களின் கூடுகளுக்கு அருகில் தம்முடைய கூட்டை பாதுகாப்புக் கருதி அமைத்துக்கொள்ளும்.

கரிச்சான் குருவிகளா …கரிச்சான் குருவிகள் கிராமப் புறங்களில் இடையன் ஆடு மாடுகளை மேய ஓட்டிச் செல்லும் போது அவற்றின் மீது உட்கார்ந்து சவாரி செய்யும். அப்போது ஆடு மாடுகளின் கால்கள் செடிகளில் உட்கார்ந்து இருக்கும் வெட்டுக்கிளி, வண்ணாத்திப் பூச்சி இவற்றைக் கிளப்பிவிட அவை பறக்கும்போது, கரிச்சான் குருவி இறக்கைகளை விரித்தபடி வைத்துக் கொண்டு ‘கிளைடர்’ விமானம் போல, பறந்து சென்று பூச்சிகளைப் பிடித்துக் கொண்டு அதே மூச்சில் தான் இருந்த இடத்திற்கே வந்து சேரும் ‘பூமரேங்’ என்னும் ஆயுதம் போல.

கரிச்சான் குருவியை மின் கம்பிகள், விளக்குக் கம்பங்கள் இவற்றின் மீதும் பார்க்கலாம். அவ்வப்போது சிறிது தூரம் பறந்து சென்று இருந்த இடத்திற்கே திரும்புவதைக் காண முடியும்.

கரிச்சான் குருவிகளில் மற்றொரு வகை துடுப்பு வால் கரிச்சான் குருவி. இதன் வால் நீண்டு துடுப்பு போன்று இருக்கும் இதை ஆங்கிலத்தில் Racket-tailed Drongo என்று சொல்வார்கள்.

கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் போன்ற அடர்ந்த வனப்பகுதிகளில் மட்டுமே இவற்றை பார்க்க முடியும்.

தொடரும் …

ஆற்றல் பிரவீன்குமார்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.