அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தயவு செஞ்சு போன் பண்ணிடாதீங்க …..

திருச்சியில் அடகு நகையை விற்க

இன்று உபயோகமில்லாத ஒரு நம்பரை நீக்கம் செய்து தருமாறு அருகிலுள்ள Airtel India airtel ஸ்டோருக்கு போனேன். Family planல் இருந்து.

எந்த நம்பரை நீக்கம் செய்ய கேட்டேனோ அந்த நம்பர் பல காலமாக பயன்பாட்டில் இல்லை என்பதாலும், அந்த சிம் தற்போது யாரிடமும் இல்லை என்பதாலும் அதற்குரிய OTP வராது ஆகையால் வேறு ஏதும் வகையில் அதனை நீக்கி விட்டு இன்னொரு நம்பரை அதில் இணைத்து தரும்படி கேட்டேன்.

இந்த வார JANUARY 15 - 21 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

Otp வராது என சொன்ன நம்பருக்கு அதற்குரிய டூப்ளிகேட் சிம் வாங்கி ஒரு நாள் பயன்படுத்தி அதில் otp பெற்று அதற்குப்பிறகு நீக்கம் செய்வார்களாம்.

Airtel 4G SIM Activation: What is the process to activate Airtel 4G SIM cardஅடடா… அவர்கள் சொன்னதெல்லாம் கேட்டால் இது நார்மல் பீப்புள்ஸ்க்கான நெட்வொர்க் இல்லை என்பது மட்டும் புரிந்தது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

இன்னொரு நம்பரையும் நீக்கம் செய்ய சொன்னேன் அதற்கென Email id அப்டேட் செய்யப்பட்டால் தான் நீக்கம் செய்ய முடியுமாம்.

அதனை ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பில் செய்ய வேண்டுமாம்.

நானும் சொன்னேன் எனது குடும்பத்தில் இரு நபர்கள் அதுவும் 60,70  வயதிற்கு மேல் உள்ளவர்கள் அவர்களுக்கு மெயில் ஐடி எல்லாம் இல்லைங்க கீ பேட் போன் தான் என்றேன் அடுத்ததாக கேட்டார்களே ஒரு கேள்வி நீங்க போஸ்ட்பெய்ட் நம்பர் ஏன் பட்டன் போன்ல யூஸ் பண்றீங்கன்னு.

இதெல்லாம் ஒரு பக்கம் என்றால் ஏர்டெல் ஸ்டோரில் இதில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ள இன்றைய தினம் வரை பணம் செலுத்தியிருக்க வேண்டும் என்றார்கள் ஏற்கனவே நான் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கியில் கடந்த ஒரு வாரமாக ஆன்லைன் பேமெண்ட் பிரச்சனையாக உள்ளதால் பணமாக செலுத்துகிறேன் என்றேன் இந்த ஸ்டோரில் ஆன்லைன் பேமெண்ட் மட்டும் தான் செலுத்த முடியும் என்று சொல்லிவிட்டார்கள்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மொத்தத்தில் இன்று மூன்று மணி நேரம் டைம் வேஸ்ட்ங்க. தெரியாது,முடியாது,வேற வழியே இல்லை என்பது மட்டும் தான் பதிலாக வந்தது.

The new #AirtelThanks – differentiated services & exclusive experiences for Airtel  customers - Mobility Indiaஅரைகுறை தகவல்கள் தந்த கஸ்டமர் கேர் பெண்மணியோ நான் பேசிக்கொண்டிருக்கிறேன் ஆனால் கஸ்டமர் நாட் ரெஸ்பான்டிங், ஐ ஆம் டிஸ்கனெக்டிங் தி கால் என்று கட் செய்துவிட்டது.

திரும்பவும் போன் செய்து மேலும் தகவல்கள் பெற்றேன்.

இறுதியாக பேமிலி ப்ளான் ல் இது எல்லாம் இருந்தா தான் எந்த மாற்றமும் பண்ண முடியும்னா இதெல்லாம் சிம் மை பேமிலி ப்ளானில் இணைத்துக்கொள்ள சொல்லி நீங்கள் கூப்பிட்டு இணைத்தீர்களே அப்போது ஏன் தெரியப்படுத்தவில்லை என்றேன், சாரி என்றார்கள்.

மொத்தத்தில் ஸ்மார்ட் போன்,தொழில்நுட்ப அறிவு, அவர்கள் சொல்வதை அப்படியே சரி என ஏற்கும் மனப்பக்குவம் இவையெல்லாம் இருந்தால் மன தைரியத்துடன் ஏர்டெல்லை உபயோகிக்கலாம்.

நம்மளே இந்தப் பாடுபட்டோம்னா நான் வெளிய வரும் போது ஒரு 70வயது மதிக்கத்தக்க தாத்தா ஒருவர் வெள்ளந்தியாக அமர்ந்திருந்தார்.

வைபை,டிடிஎச், பேமிலி ப்ளான்னு இனி தயவு செஞ்சு போன் பண்ணிடாதீங்க ஏர்டெல் டீலர்களே.

 

— பத்மப்பிரியா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.