அங்குசம் சேனலில் இணைய

‘பிளாக் மெயில்’ படத் தயாரிப்பாளருக்கு பிளாக்மெயில்!

‘ஜே.எஸ்.டி.பிலிம் ஃபேக்டரி’ பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்து வரும் ‘பிளாக் மெயில்’

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

‘ஜே.எஸ்.டி.பிலிம் ஃபேக்டரி’ பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்து வரும் 12-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது ‘பிளாக்மெயில்’ படம். மு.மாறன் டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், தேஜு அஸ்வினி, பிந்துமாதவி, ஸ்ரீகாந்த், ரமேஷ் திலக், லிங்கா, ரெடின் கிங்ஸ்லி, முத்துக்குமார், சந்திரிகா, கிரிஜா ஹரி உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு : கோகுல் பினாய், இசை : சாம்.சி.எஸ்., எடிட்டிங் ; சான் லோகேஷ், ஆர்ட் டைரக்டர் : ராம், பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல்நாசர். தமிழ்நாடெங்கும் தனஞ்செயன் வெளியிடுகிறார்.

கடந்த ஆகஸ்ட்.01-ஆம் தேதி படத்தை ரிலீஸ் பண்ணும் முடிவில் ஜூலை 19-ஆம் தேதி சென்னை கமலா தியேட்டரில் படத்தின் டிரெய்லர் & ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. ஆனால் படம் ரிலீசாகவில்லை. இதன் பின்னணியில் இருந்த சினிமா சங்கங்களின்  பிளாக்மெயில் சங்கதிகள் இந்த செப்டம்பர்.04-ஆம் தேதி நடந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் வெளிச்சத்துக்கு வந்தன.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

பிளாக்மெயில்
பிளாக்மெயில்

இந்த நிகழ்வில் படத்தில் நடித்த ரெடின் கிங்ஸ்லி, பிந்துமாதவி, ஸ்ரீகாந்த் ஆகியோரைத் தவிர அனைவருமே ஆஜராகியிருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் டி.சிவா,  டைரக்டர்கள் ஏ.எல்.விஜய், சசி, சதீஷ் செல்லக்குமார், ரிதேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அனைவருமே படத்தின் தயாரிப்பாளருக்கு வந்த சோதனைகள்  குறித்தும் ஜி.வி.பி.யின் உழைப்பு குறித்தும் சிலாகித்துப் பேசினார்கள்.

பிளாக்மெயில்தயாரிப்பாளர் அமல்ராஜ் பேசும் போது,

“பல சிக்கல்கள், தடைகளைத் தாண்டி இப்படம் வெளிவருகிறது. இதற்குக் காரணம் தனஞ்செயன் சார் தான். இப்போது வரை அவர் தான் பக்கபலமாக இருக்கிறார். ஜி.வி.பிரகாஷின் ஒத்துழைப்பை மறக்க முடியாது. படத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி”  என்றார்.

கேமராமேன் கோகுல் பினாய்,

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

“தயாரிப்பாளர் அமல்ராஜ் ரொம்பவே வெள்ளந்தியானவர். அவரின் இந்த மனசுக்காவே இந்தப் படம் வெற்றி பெற்று அவருக்கு நல்ல லாபத்தைக் கொடுக்க வேண்டும்”.

டைரக்டர் மு.மாறன்,

“இப்படி ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது ரொம்ப கஷ்டம். இப்படம் ஹிட்டாகி, அடுத்தடுத்து அவர் படங்கள் தயாரிக்க வேண்டும். இக்கட்டான சூழலில் தனஞ்செயன் சார் கைகொடுத்தது ஆறுதலாக இருக்கிறது”

ஜி.வி.பிரகாஷ்,
ஜி.வி.பிரகாஷ்,

ஜி.வி.பிரகாஷ்,

“இந்தப் படத்தால் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைக்க வேண்டும். படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்”.

தனஞ்செயன்,

“பிளாக்மெயில் என்ற இந்தப் படத்தை தயாரித்த அமல்ராஜுக்கு பல சினிமா சங்கங்கள் பிளாக்மெயில் பண்ணியது ரொம்பக் கொடுமை. இதைக் கேள்விப்பட்டு நான் படத்தைப் பார்த்த பிறகு நானே ரிலீஸ் செய்கிறேன், புரமோஷன் வேலைகளையும் பார்த்துக் கொள்கிறேன். நீங்க மத்த வேலைகளைப் பாருங்க என அமல்ராஜுக்கு ஊக்கம் கொடுத்தேன். இதை செய்ததில் எனக்கு திருப்தி. அமல்ராஜுக்கு நல்ல லாபம் கிடைத்து அவரும் திருப்தியடைவார். படம் சூப்பரா வந்திருக்கு. மீடியா நண்பர்கள் தாராளமாக விமர்சனம் பண்ணுங்க. பல யூடியூபர்கள் தனிநபர் வன்மத்துடன் விமர்சிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை நாங்களும் அடையாளம் கண்டு கொண்டோம்.  அந்த மாதிரி அடாவடிப் பேர்வழிகளை விரைவில் அடித்துவிரட்டுவோம்”.

 

—   ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.