தமிழக ஆளுனரை கண்டித்து அக்டோபர் 28 ல் முற்றுகை போராட்டம் தமுமுக அறிவிப்பு !
திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக செயல்வீரர்கள் கூட்டம்…*
திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக செயல்வீரர்கள் கூட்டம் 08.10.2023. அன்று மாலை 06.30 மணியளவில் மாவட்ட தலைவர் அ.பைஸ் அகமது MC, தலைமையில் நடைபெற்றது.
சகோ நூர்தீன் சலாஹி அவர்களின் இறை வசனத்துடன் கூட்டம் தொடங்கியது. தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா வரவேற்பு உரையாற்றினார். ஆளுனர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் திருச்சி மேற்கு மாவட்டம் சார்பில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வது என்ற தீர்மானத்தை தமுமுக மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர் வாசித்தார்.
தமுமுக மாநில பொருளாளர் ஷபியுல்லாஹ் கான் அவர்கள் நீண்ட காலமாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய தமிழக அரசின் பரிந்துரையில் கையெழுத்து இடாமல் காலம் தாழ்த்தும் ஆளுனரை கண்டித்து அக்டோபர் 28 ல் நடைபெறும் ஆளுனர் மாளிகை முற்றுகை போராட்டம் பற்றி நடைபெற்ற இச் செயல்வீரர்கள் கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தார்கள்.
அமைப்பு செயலாளர் பழனி பாரூக் அவர்கள் கால் நூற்றாண்டு காலமாக சிறையில் உள்ள மக்களுக்கான தமுமுக செய்த போராட்டங்கள், சட்ட உதவிகள், பொருளாதார உதவிகளை முழுமையாக பட்டியலிட்டு ஆளுநர் மாளிகை முற்றுகை என்பது சிறைவாசிகளுக்கான இறுதி போராட்டமாக இருக்கட்டும் எனவும் அதற்காக ஆயிரக்கணக்கான மக்களை அழைத்து கொண்டு சென்னை நோக்கி வர வேண்டும் என கேட்டு கொண்டார்.
IPP மாநில துணை செயலாளர் திருச்சி ரபீக் அவர்கள் தமுமுக கடந்த கால பணிகளை நினைவு கூர்ந்து வரும் காலங்களில் மார்க்கம் மற்றும் மருத்துவ சேவை பணிகளில் அதிகமாக கவனத்தை செலுத்த வேண்டும் என நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார். முன்னதாக போராட்ட விளம்பர பேனர்கள் அனைத்து நிர்வாகிகளுக்கும் வழங்கப்பட்டது.
மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் நன்றியுரை ஆற்றினார்.
இக் கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சபீர் கான், தலைமை பிரதிநிதி வழ. நூர்தீன், விழி அமைப்பின் மாநில துணை செயலாளர் முனைவர் முஸம்மில் கான், IT Wing மாநில துணை செயலாளர் நஜீர், SMI மாநில துணை செயலாளர் அப்பீஸ், மாவட்ட துணை தலைவர் அக்பர், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் சமது, இம்ரான், ஹுமாயூன் கபீர், அசாருதீன், அப்துல் ரஹ்மான், அப்துல் சமது, மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் முபாரக், பஜார் பக்ருதீன், தல்ஹா பாபு, ஷரீப், இலியாஸ், சதாம் உசேன், உஸ்மான், அப்துல் காதர் (எ) மோத்தி, அப்துல் ரஹீம், சிராஜ்தீன், அப்பாஸ், பஜ்லூர் ரஹ்மான், காஜா அகமது, அப்துல் ரசாக், தென்னூர் சதாம் உள்ளிட்ட ஒன்றிய, நகர, பகுதி, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.