திருச்சியில் மாபெரும் இரத்ததான முகாம்!

0

திருச்சியில் மாபெரும் இரத்ததான முகாம்!

திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்கள், திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றின் சார்பில் விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

ரத்த வங்கிகளின் உதவியுடன் நடைபெற்ற முகாமில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் மூலம் சுமார் 120 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற விழாவில் எக்ஸ்எல் குழுமத் தலைவரும் ரோட்டரி முன்னாள் ஆளுநருமான முருகானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடையாளர்களை வாழ்த்தி பாராட்டினார்.

மேலும் கண்தானம் குறித்த விழிப்புணர்வு உரையாற்றப்பட்டது. இதில் கல்லூரி குழுமத் தலைவர் சுப்பிரமணி, ஜோசப் கண் மருத்துவமனை  நிர்வாக அதிகாரி சுபா பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.