“மாமன்னனு”க்கு தேவைப்பட்ட “தேவர்மகனும்” ! மாரி செல்வராஜின் “கைடு”ம் !

0

“மாமன்னனு”க்கு தேவைப்பட்ட “தேவர்மகனும்” ! மாரி செல்வராஜின் “கைடு”ம் !

உதயநிதி ஸ்டாலினின் கடைசிப்படமான மாமன்னன் ஜூன். 29-ஆம் தேதி பக்ரீத் அன்று ரீலீசானது. வசூல் ரீதியாக பார்த்தால் மாமன்னனுக்கு குறை யொன்றுமில்லை தான். ஆனால் இந்த செல்லுலாய்டுக்குள் செலுத்தப்பட்டு, வெளிப்பட்ட மாரிசெல்வராஜின் “கைடு” கருத்துக்கள் ஒன்றும் புதுமையானதுமல்ல, மாரி செல்வராஜீம் விந்தையானவருமல்ல. “மாமன்னன்” ‘பட ரிலீசுக்கு பத்து நாட்களுக்கு முன்பு சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக புரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்டார். அந்த விழா மேடையிலேயே “மாமன்னன்” டைரக்டர் மாரிசெல்வராஜ் தேவர்மகன் குறித்துப் பேசி புரமோஷனை மேலும். பிரம்மாண்டப்படுத்தினார். அதற்கடுத்த பத்து நாட்களும் “தேவர் மகன்” சலசலப்பும் சர்ச்சையும் நிற்காமல் ஒடிக் கொண்டே இருந்தன.

https://businesstrichy.com/the-royal-mahal/

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ரிலீசுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது ஜூன் . 27-ஆம். தேதி, மாரி செல்வராஜை அழைத்துக் கொண்டு கமல்ஹாசனை சந்திந்தார் உதயநிதி ஸ்டாலின். தேவர் மகன் சலசலப்பும் சர்ச்சையும் நின்றன. புரமோஷனும். “கிராண்ட் சக்சஸ்”. இப்ப படமும் “சூப்பர் சக்கல்”. படத்தின் டைட்டில் கேரக்டராக வரும் ” வைகைப்புயல்’ வடிவேலுவை முற்றிலும் வேறு வடிவத்தில், நடிப்பில் ஜொலிக்க வைத்த மாரி செல்வராஜை மனதாரப் பாராட்டலாம். அதே போல் இந்தக் கதைக்குள் சில ”உள் கதைகள்” இருந்தாலும் அதற்குள் தன்னைப் பொருத்திக் கொண்ட உதயநிதியை உச்சி முகர்ந்து பாராட்டலாம். பாராட்டியே ஆக வேண்டும். பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உட்பட எல்லோருமே, நிறைவான நடிப்பைத் தந்துள்ளார்கள். இன்னொரு முக்கியமான நபர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது அபரிதமான இசைப் பணி பல இடங்களில் மனசைப் பிசைகிறது. சில இடங்களில் திடுக்கிட வைக்கிறது. சில இடங்களில் வருடிச் செல்கிறது.

மாமன்னனாக வரும் ”வைகைப்புயல்” வடிவேலுவின் கதாபாத்திர வடிவமைப்பை உன்னிப்பாகக் கவனித்தால் ”தேவர் மகன்” இசக்கியின் முதிர்ச்சியான அனுபவம் தான் என்பது தெரியும். அந்தக் கேரக்டர்கள் சார்ந்திருந்த சமூகம் தான் வேறு வேறாகத் தெரியும். முப்பது வருடங்களுக்கு முன்பு இசக்கி எப்படி பேசப்பட்டாரோ, அதைவிடப் பலநூறு மடங்கு உன்னதமாக பேசப்படுகிறார் இந்த ”மாமன்னன்” சரி, ”மாமன்னன்” மூலம் மாரி செல்வராஜ் பேசியுள்ள அரசியல், சமூகநீதி,  என பெரும்பாலோர் சிலாகிப்பதை போலவே, நாமும் சிலாகிக்கிறோம் என்பதைச் சொல்வதில் நமக்குத் தயக்கமோ, தடுமாற்றமோ இல்லை. ஆனால், மாரி செல்வராஜீக்கு தயக்கமோ தயக்கம் அப்படி ஒரு தயக்கம் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ”மாமன்னன்” வீட்டில் அம்பேத்கர் இருக்கிறார்,. புத்தர் இருக்கிறார், இறக்கை முளைத்த பன்றி கூட இருக்கிறது.  ஆனால் தமிழகத்தின் சமூகநீதி போர்க்களத்தின் முன்களப் போராளிகளான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரெல்லாம் மாரி செல்வராஜீக்கு தெரியாதா?

முதல் அமைச்சராக வரும் லாலிடம் ரத்னவேலுவும் மாமன்னனும் பேசும் காட்சிகளில் மிகச்சிறிய அளவிலான பெரியார் சிலையைக் காட்டுகிறார், அதையும் பின்புறமாகத் தான் காட்டக் தெரிகிறது மாரி செல்வராஜால். தமிழகத்தில் சமூகநீதிக்காக மட்டுமல்ல, அனைத்து வகைகளிலும் தமிழனின் மேம்பாட்டிற்காக உழைத்த இந்த முப்பெரும் கலைவர்களை திரையில் காட்ட முடியாத அளவுக்கு, மாரி செல்வராஜின் மனதை இருள் திரை மூடியிருக்கு.
அதே நேரம், தனக்குள் இருக்கும் சமூகநீதி மேதமைத்தனம் காட்ட, ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஹீரோயின் கேரக்டருக்கு லீலா என்ற பெயர் வைத்துள்ளார். ஆதிக்க சாதியினரின் அநீதிக்கு எதிராகப் போராடியதால் படுகொலை செய்யப்பட்டவர் மதுரை மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலராக இருந்த லீலாவதி. இந்தப் பெயரை மாமன்னனின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷீக்கு வைத்து, சில சீன்களில் அவர் அணிந்திருக்கும் டீசர்ட்டில் சேகுவேராவையும் வைத்துள்ளார் மாரி.

சேகிவேரா மாபெரும் புரட்சியாளர், பொதுவுமைச் சிந்தனையாளர் தான். ஆனால் தமிழ்நாட்டின் சமூக நீதிக்கும் அவருக்கும் என்ன சம்பங்கம்? சகோகரர் மாரிசெல்வராஜிக்குத் தான் வெளிச்சம். படத்தில் மாமன்னன சார்ந்த சமூகத்தின் குறியீடாக பன்றியைக் காட்டியிருப்பது கூட,மாரி செல்வராஜின் பிற்போக்குத் தனத்தைக் தான் காட்டுகிறது. அடிமுறைக் கலையைக் கற்றுக் கொடுக்கும் ஹுரோ அதிவீரனை, கோழிப் பண்ணையின் முதலாளியாக காட்டியிருக்கலாமே? நீங்கள் கையில் எடுத்திருக்கும் கதைக்களமான கொங்கு மண்டலத்தில் கோழிப்பண்ணை யும் மிகப் பெரிய தொழில் தானே. இதையெல்லாம் உதயநிதி கவனிக்கவில்லையே.? பராசக்தி, மனோகரா, அபிமன்யு வீரன், வேலுத்தம்பி, பாலைவன ரோஜாக்கள் மூலம் அனைத்து அரசியலையும் பேசிவிட்டார் கலைஞர். ஆனால் மாமன்னனில் உட்காரச் சொல்லும் அரசியலை உக்கிரமாகவும் ஆக்ரோஷமாகவும் உணர்ச்சியைக் தூண்டும் வகையிலும் காட்டியதைத் தவிர வேறொன்றும் புதிதில்லை, மாரி செல்வராஜூக்கு அரசியல் புரிதலில்லை.

மாரிசெல்வராஜூம் அவரது குரு பா. இரஞ்சித்தும் தங்களுக்கென கைடு’ [ guide] வைத்திருக்கிறார்கள். எல்லாவகையான ஒரு கேள்விகளுக்கும் இந்த கைடில் ஒரே விடைதான் இருக்கும். அது தான் சரியான விடை, சமூக நீதிக்கான விடை என்பதை திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டே இருப்பார்கள் மாரி செல்வராஜீம் பா. இரஞ்சித்தும்.

 

– மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.