அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘மகுடம்’

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தயாரிப்பு: சூப்பர் குட் பிலிம்ஸ், திரைக்கதை-இயக்கம்& ஹீரோ: விஷால், அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ், வம்சி கிருஷ்ணா, சபுமோன், அஜய், தம்பி ராமையா, சித்ரா லட்சுமணன் ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம்.நாதன், அபிநந்தன் ராமானுஜம், ஜெய் கார்த்திக், இசை: ஜி.வி.பிரகாஷ்குமார், எடிட்டிங்: என்.பி.ஸ்ரீகாந்த், ஸ்டண்ட்: திலீப் சுப்பராயன், நடனம்: பிருந்தா, தினேஷ், காஸ்ட்யூம்: வாசுகி பாஸ்கர், பிஆர்ஓ: ரியாஸ் அகமது & பாரஸ் ரியாஸ்

1965-ல் கதை சென்னைல ஆரம்பிக்குது. இங்கே சாலையோரம் வசிக்கும் சிறுவர்களைக் கடத்தி பிச்சை எடுக்க வைக்கிறது ஒரு ரவுடிக் கும்பல். அந்த கும்பலிடம் இருந்து தப்பிய ஒரு சிறுவன் லாரியில் ஏறி ஆந்திராவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இறங்குகிறான்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

சின்ன சின்ன திருட்டுகளில் ஆரம்பித்து…. வாலிப வயதில் அந்த துறைமுகத்தையே தனது கட்டுப்பாட்டில் வைக்கும் லிங்கா ( விஷால்) என்ற தாதாவாகிறான். கதை படக்குன்னு ஜம்பாகி 2025-க்கு வருது. இங்கே மெடிக்கல் ரெப்பாக இருக்கும் நடுத்தர குடும்பத்தின் கிருபாகரனுக்கு ( இதுவும் விஷால் தான்) மனைவி (துஷாரா விஜயன்) மற்றும் இரண்டு குழந்தைகள். மூணாறுக்கு ஃபேமிலியுடன் டூர் போகும் போது ஒரு ரவுடிக் கும்பல் அட்டாக் பண்ணுகிறது. இதில் துஷாராவும் பெண் குழந்தையும் இறந்து விடுகிறார்கள். இதுக்கெல்லாம் காரணம் தனது அப்பன் லிங்கா தான் என ஆத்திரமாகிறான் கிருபாகரன்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அப்பாவிடமிருந்து மகன் ஏன் பிரிந்தான்? அப்பாவும் மகனும் ஒன்று சேர்ந்தார்களா? யாருக்கு மகுடம் சூட்டப்பட்டது என்பது தான் கதை. எழுத்தில் படிக்கும் போது உங்களுக்கு நல்லாத்தான் இருக்கும். ஆனால் 3 மணி நேரம் 5 நிமிடம் நம்ம நிம்மதிக்கு 100% க்யாரண்டி இல்லை. ரெப் கிருபாகரனும் டாக்டர் சித்ரா லட்சுமணனும் சந்திக்கும் முதல் சீனே நியூமராலஜியில ஆரம்பித்து நம்மை நிலைகுலைய வைத்தது.
அதன் பிறகு துஷாராவை பெண் பார்க்கப் போகும் இடத்தில், துஷாராவின் மிலிட்டரி ரிடையர்டு அப்பாவாக வரும் தம்பி ராமையா சீன் அபத்தமோ அபத்தம். அதைவிட அபத்தம் சொந்தமாக கார் வாங்க குடும்பத்துடன் கார் ஷோரூம்களில் துஷாராவையும் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு விஷால் அலைவது. இப்படியே இடைவேளை வரை ஒன்றரை மணி நேரம் ஓடுச்சு. அதுக்கப்புறம் லிங்கா ஃப்ளாஷ் பேக்….அதுல அஞ்சலி…. லிங்காவின் நண்பர்களாக ஜெயப்பிரகாஷ், ஜான் விஜய், அப்புறம் மூன்று வில்லன்கள், எம்எல்ஏ ஆட்கள் அட்டகாசம்….அதுல அஞ்சலியை போட்டுத் தள்ளுறதுன்னு நம்மளை சுத்தலில்விட்டு கதறக் கதற அடிச்சுட்டாய்க. அதுலயும் க்ளைமாக்ஸ்லாம் இருக்கே…. அடேங்கப்பா…. இந்திய சினிமாவில் இதுவரை நாம் பார்த்திராத பெருங்கொடுமை.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

3 மணி நேரம் 5 நிமிட படத்தில் மூணு சீன்களையாவது ரசிச்சு நல்லதா நாலு வரி எழுதணும்னு நமக்கும் ஆசை தான். ஆனா என்ன பண்றது சட்டில இருந்தால்தானே கரண்டில வரும். ஹலோ விஷால் சகோதரா… வயசான கெட்டப்பும் உங்களுக்கு டோட்டலா செட் ஆகல, டைரக்ஷனும் உங்களுக்கு சுத்தமா வரல. வேணாம் ப்ரோ… விட்ருங்க ப்ரோ. மொத்தத்தில் இந்த ‘மகுடம்’ சுக்குச்சுக்கா ஒடஞ்ச மண் குடம்.

அங்குசம் பார்வையில் ‘மகுடம்’ 29/100

—    ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.