அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘விஸ்வநாத் & சன்ஸ்’

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தயாரிப்பு: சிதாரா எண்டெர்டெய்ன்மெண்ட் & ஃபார்ச் சூன் ஃபோர் சினிமாஸ் ‘ சூர்ய தேவர நாக வம்சி & சாய் செளஜன்யா. டைரக்டர்: வெங்கி அட்லூரி, ஆர்டிஸ்ட்: சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ராஜீவ் மேனன், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ, சுனில் ரெட்டி, நாசர், ஜார்ஜ் மரியன், காளி வெங்கட், ஒளிப்பதிவு: நிமிஷ் ரவி, இசை: ஜி.வி.பிரகாஷ்குமார், எடிட்டிங்: நவீன் நூலி, ஆர்ட் டைரக்டர்: பங்களான், ஸ்டண்ட்: வி.வெங்கட், பிஆர்ஓ: யுவராஜ்

2018 பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்கிறார் தமிழ்நாட்டின் பெரிய தொழிலதிபர்  சஞ்சய்[சூர்யா]. தனது அம்மா நிர்மலாவை[ராதிகா சரத்குமார்] ஒதுக்கிவிட்டு,  அப்பா விஸ்வநாத்[ராஜீவ் மேனன்] சினிமா ஹீரோயின் அஞ்சலியை [ரவீனா டாண்டன்] இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டதால், திருமணத்தின்மீதே வெறுப்படைகிறார் 40 வயதான சஞ்சய். மகனின் பிடிவாதத்தால் தனது குடும்பத்திற்கு ஒரு வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலை நிர்மலாவுக்கு. இதனால் மைல்ட் அட்டாக் ஆகி, ஆபரேஷன் செய்ய வேண்டிய சூழலில், அம்மாவின் ஆசையை நிறைவேற்ற அமெரிக்கா போய் அங்கே வாடகைத் தாய் மேடி [ 20 வயது மமிதா பைஜு] மூலம் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்புகிறார் சஞ்சய். இது நிர்மலாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றாலும், பேரனுக்கு அபய் என பெயர் வைத்து, பேர் சூட்டும் விழாவை பிரம்மாண்டமாக நடத்துகிறார் நிர்மலா.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

விஸ்வநாத் & சன்ஸ்பிறந்து சில மாதங்களே ஆன அந்தக் குழந்தைக்கு முதுகெலும்பு மஜ்ஜை நோய் தாக்குகிறது. பெற்றுக் கொடுத்தவளின் எலும்பு தான் செட்டாகும் என்பதால் மேடியை அழைத்துவர மீண்டும் அமெரிக்கா போகிறார் சஞ்சய். அப்போது தான் மேடியை முதல்முறையாக பார்க்கிறார்.

“என்னை டச் பண்ணாமலேயே கர்ப்பம் ஆக்கியவன் நீதானா?” என கேஷுவலாகக் கேட்கும் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்டான[?] மேடி லட்சங்களில் அமெரிக்க டாலரை சஞ்சயிடம் வாங்கிக் கொண்டு, தமிழ்நாட்டுக்கு வருகிறார். குழந்தைக்கு ஆபரேஷன் நல்லபடியாக முடிந்ததும், வாடகைத் தாய்க்கு நிஜத்தாய் பாசம் வருகிறது. சஞ்சயை திருமணம் செய்து கொண்டால் இங்கேயே நிரந்தரமாக வாழலாம் என்ற ஆசையும் வருகிறது மேடிக்கு. ஆனால் சஞ்சய்க்கோ தன்னைவிட 20 வயது கம்மியான மேடி செட்டாகமாட்டாள் என்ற நினைப்புடன் அவளை ரிஜெக்ட் பண்ணுகிறார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

சஞ்சயும் மேடியும் ஒண்ணு சேர்ந்தார்களா? என்பதன் க்ளைமாக்ஸ் தான் ’விஸ்வநாத்& சன்ஸ்’.

பழைய சைக்கிள் ரிப்பேரானதும் அப்பா விஸ்வநாத்திடம்  புது சைக்கிள் கேட்கும் போது, அவர் சொல்லும் காரணம் தான் ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டி ஆரம்பிக்கும் போது, சஞ்சயின்  துப்பாக்கியை எதிரிகள் பிரித்துப் போட்ட போதும், அதை அவர் சரி பண்ணி தங்கப் பதக்கம் வெல்வது புதுசாகத் தான் இருக்கு. 7 ஸ்டார் லைஃப் ஸ்டைலில் பிரம்மாண்ட வீடு, அதில் சூர்யாவின் ஸ்டைலிஷ் நடிப்பு, பாடிலாங்குவேஜ், ஃபிட்டான பாடி, காஸ்ட்யூம், லுக் இதெல்லாம் சூர்யாவை ரொம்பவே ரசிக்க வைக்கிறது. அப்படிப்பட்ட் சூர்யாவை மாதம் ஒரு தடவை ஃபாரின் டிரிப் போய், வெரைட்டியான வெளிநாட்டுப் பெண்களுடன் குஜாலாக இருக்கும் உமனைஸைராக கேரக்டரை வடிவமைத்திருப்பது தான் டோட்டல் டேமேஜாக்கிவிட்டது. அம்பானி, அதானி போல 7 ஸ்டார், 8 ஸ்டார் லைஃப் ஸ்டைலில் வாழ்பவர்கள் இப்படித்தான் வாழ்வார்கள் போல…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

விஸ்வநாத் & சன்ஸ்துறுதுறு மமிதா பைஜு ஹீரோயின் என்றாலும் மகன் மீது பாசம், கண்டிப்பு, கல்யாணம் பண்ணலேயேன்ற ஏக்கம், கவலை இவையெல்லாத்தையும் மிகச் சரியாக மிக்ஸ் பண்ணி பெர்ஃபாமென்ஸில் வெளுத்துக்கட்டும் ராதிகா சரத்குமார் தான் செகண்ட் ஹீரோயின் என்றே சொல்லலாம். “யார்டா இவ…. எங்கிருந்துடா இவளைப் பிடிச்ச” என ஆரம்பத்தில்  மமிதாவைப் பார்த்தாலே கடுப்பாகும் ராதிகா… போகப்போக அவர் மீது அன்பு செலுத்துவது, தனது மகனின் கல்யாண வெறுப்புக்கான காரணத்தை உருக்கமுடன் சொல்வது, தனது குடும்ப போட்டோக்களைச் சுட்டிக்காட்டி வாரிசு ஆசையை கண்ணீருடன் பகிர்வது இதிலெல்லாம் ’கலையரசி’யின் நடிப்புக்கொடி பறக்குது. ஆனால் காண்டம் பாக்கெட்டை கையில் வைத்துக் கொண்டு, மகனின் அஜால்குஜால் லீலைகளை மமிதாவிடம் சொல்வதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஒருவேளை 7 ஸ்டார், 8 ஸ்டார் லைஃப் ஸ்டைல் அம்மாக்கள் இப்படித்தான் இருப்பார்கள் போல.

படத்தில் பெரும்பாலும் தொடை வரை தெரியும் டிரவுசர், டீசர்ட்டில் வந்து அதகளம் பண்ணுகிறார் மமிதா பைஜு. அப்பப்ப… ஃபுல் பாட்டில் சரக்கு அடிக்கிறார், தம் அடிக்கிறார். ஏன்னா அமெரிக்காவில் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்ல அப்படித்தான் இருப்பார். மத்தபடி ராதிகாவிடம் சூர்யாவை சாண்டா கிளாஸோவை கம்பேர் பண்ணிச் சொல்லும் போது, சூர்ய்வாவிடம் காதலைச் சொல்லும் போது, சூர்யா வீட்டு முன்பு உட்கார்ந்து உண்ணாவிரதம் இருக்கும் போது, குழந்தை மீது பாசத்தைக் கொட்டும் போது என நடிப்பில் நம்ம மனசை அள்ளுகிறார் மமிதா பைஜு. இடைவேளை வரை செம க்ரிப்பாகவும் ஃபீலிங்காகவும் போகிறது படம்.

விஸ்வநாத் & சன்ஸ்இடைவேளைக்குப் பிறகு ஊட்டியில் நடைபெறும் சூர்யாவின் சித்தி ரவீனா டாண்டனின் மகள் பவானி ஸ்ரீயின்  கல்யாணக் காட்சிகள், குடும்பம் ஒன்றிணைதல், நாசர் வந்தபின்பு நடக்கும் சீன்களெல்லாம் டிவி சீரியலாகி சலிப்பை ஏற்படுத்துகிறது. சூர்யாவின் மச்சானாக வரும் சுனில் ரெட்டி சில சீன்களில் லைட்டா காமெடி பண்ணியிருக்கார். இரண்டு சீன்களில் காளிவெங்கட் வருகிறார். ஒரு சீனில் மைம் கோபி வருகிறார். அதுவும் சூர்யாவுக்கு  சென்னையில் ஒரு ஃபைட் சீன் எடுத்தாச்சு. ஊட்டியில் ஒரு ஃபைட் சீன் எடுக்கணும்கிறதுக்காவே வருகிறார் மைம் கோபி.

நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவும் ஜி.வி.பிரகாஷின் இசையும் டபுள் ஓகே.

‘விஸ்வநாத் & சன்ஸ்’ 7 ஸ்டார் ஓட்டல் ட்ரீட்.

அங்குசம் பார்வையில் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ 68/100

—    ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.