ரூ.462 கோடி வளா்ச்சித் திட்டப் பணிகள் – நிர்வாகத் துறை செயலாளர் நேரடி ஆய்வு!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., , திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பொன்மணி இ.ஆ.ப.,  கட்டுமான பணிகள் குறித்து விளக்கமளித்தார் .

பஞ்சப்பூரில் 22.10 ஏக்கர் பரப்பளவில் ரூ.236.00 கோடி மதிப்பீட்டில், பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தரைக்கீழ் தளத்தில் 450 கடைகள், தரைத்தளத்தில் 300 கடைகள், முதல் தளத்தில் 28 கடைகள் (அலுவலகப் பயன்பாடு) அமைய உள்ளன. தானிய விற்பனைக் கடைகளின் எண்ணிக்கை – 60, தினசரி விற்பனைக் கடைகளின் எண்ணிக்கை – 850, மண்டி (ஏலம் விடுவதற்கான திறந்தவெளிப் பரப்பு) – 37,200 சதுரடி, உணவகம் – 7,200 சதுரடி (150 நபர்கள் அமர்ந்து உணவருந்தக் கூடியது), கழிப்பிடங்களின் எண்ணிக்கை – 138, சிறுநீர் கழிப்பிடம் – 36, குளியலறை – 36 என அமைக்கப்பட்டு வருகிறது. கனரக சரக்கு வாகன நிறுத்தம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு விட்டார்கள் .

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பின்னர் பஞ்சப்பூரில் 100 MLD SBR தொழில்நுட்பத்தில் நவீன முறையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.226.35 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் பயன்பெறும் வகையில் இதன் பணிகளைத் துரிதப்படுத்த பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார். அப்பகுதியில் பசுமைத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய கழிப்பறைகளை ஆய்வு செய்து, அதன் பராமரிப்புப் பணியாளர்களிடம் கழிப்பறைகளைத் தூய்மையாகப் பராமரிக்கவும், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும், பொதுமக்களுக்குக் கை கழுவுவதற்கு சோப்பு வாங்கி வைக்கவும், பேருந்து முனைய வளாகத்தைத் தூய்மையாகப் பராமரிக்கவும் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வில் ஆணையர் திருமதி. நே. பொன்மணி, இ.ஆ.ப., மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.