அங்குசம் பார்வையில் ‘ஜான் டோ’

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தயாரிப்பு ‘அர்கா மீடியா ஒர்க்ஸ்’ பிரசாத் தேவினேனி, ஷோபு யெர்லகட்டா, இணைத் தயாரிப்பு: கிஷோர் கேதாரி, மதுமிதா, டைரக்டர்: மதுமிதா, கதை — திரைக்கதை: மதுமிதா & நிக்கோலஸ் செவாலியே, ஆர்டிஸ்ட்: அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன்,  ஸ்ருஷ்டி, ஷாரா வினீத் சந்தோக், ஜெயப்பிரகாஷ், அனுபமா குமார், மாஸ்டர் நீரவ், அர்ச்சனா சந்தோக், படவா கோபி, கார்த்திக் குமார், ஒளிப்பதிவு: ப்ரீத்தா ஜெயராமன், இசை: முஜீப் மஜீத் & தி ஆர்டிஸ்ட் 404, எடிட்டிங்: விஜய் வெங்கட்ரமணன், காஸ்ட்யூம்: பிரியா ஹரன், பிரியா ஹரி, ஸ்டண்ட்: தினேஷ் சுப்பராயன், ஆக்ஷன் சந்தோஷ், தமிழ்நாடு ரிலீஸ்: ஏஜிஎஸ், பிஆர்ஓ: யுவராஜ்.

'John Doe'அப்பா[படவா கோபி]வைப் போல் போலீஸாக வேண்டும் என்பது சின்ன வயதிலிருந்தே சந்துருவுக்கு [அர்ஜுன் தாஸ்]. ஆனால் அப்பாவோ மகன் மீது எப்போதும் எரிந்துவிழும் கேரக்டர். இதனால் அம்மா அர்ச்சனா, மகன் மீது அதீத பாசம் வைக்கிறார். இந்த நிலையில் திடீரென அர்ச்சனா இறந்து போக, நிலைகுலையும் சந்துரு, மனதைத் தேற்றிக் கொண்டு படித்து போலீசாகிறான். கேரளம்-தமிழ்நாடு எல்லையில் கேரள மாநிலத்தின் கட்டப்புழா என்ற ஊரில் சப்-இன்ஸ்பெக்டராக வேலைக்குச் சேர்கிறார். செக்போஸ்டில் டியூட்டியில் இருக்கும் போது, ஒரு வேன் ஆற்றில் கவிழ்ந்து மூழ்குகிறது. அந்த வேனுக்குள் ஒரு சிறுவன் மூச்சுத்திணறி இறக்கிறான். இது விபத்தா? இல்லை கொலையா? என்ற விசாரணையில் இறங்குகிறார் அர்ஜுன் தாஸ்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

துபாயில் தனது கணவர் ஆக்சிடெண்டில் இறந்துவிட, இங்கே தமிழ்நாடு-கேரளம் எல்லையில் உள்ள குறிஞ்சிமேடுக்கு தனது மகன் நீரவ், மகள் ஷாரா வினீத் சந்தோக் ஆகியோருடன் வருகிறார் ஸ்ருஷ்டி. வந்த சில நாட்களில் தனது மகன் காணாமல் போக, அதே ஊரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் சஞ்சனா நடராஜனிடம் புகார் கொடுக்கிறார். கட்டப்புழாவில் இறந்த சிறுவன் யார்? எப்படி இறந்தான்? இங்கே ,குறிஞ்சிமேட்டில் காணாமல் போன நீரவ் கிடைத்தானா? இதான் இந்த ‘ஜான் டோ’.

'John Doe'இந்த டைட்டிலுக்கான அர்த்தத்தை கேரள ஆஸ்பத்திரியின் பெண் டாக்டர் ஒருவர் அர்ஜுன் தாஸிடம் சொல்கிறார். அதான் நமக்கு கொஞ்சம் புரியல. மற்றபடி போலீஸ் இன்வெஸ்டிகேஷன்&  க்ரைம் த்ரில்லர் ஜானருக்குரிய திகில் சமாச்சாரங்கள் எதையும் காட்டாமல், நிதானமாகவும் கொஞ்சம் பதட்டமாகவும் கதை பயணிக்க வைத்துள்ளார் டைரக்டர் மதுமிதா.  போலீஸ் கெட்ட்டப்பில் அர்ஜுன் தாஸ் நல்லாத்தான் இருக்கார். ஆனால் போலீஸ் மிடுக்கு தான் லைட்டா மிஸ்ஸிங். அதே போல் இவரது கரகர குரல் சில இடங்களில் ப்ளஸ்ஸாகவும் பல இடங்களில் மைனஸாகவும் போய்விட்டது. எப்படின்னா… இரண்டு, மூன்று வரிகளில் வசனம் என்றால் இவரது குரல் நல்லா கேட்குது. இரண்டு பக்க வசனம் என்றால், ரொம்ப உன்னிப்பாக காதுகளைக் கொடுத்து கேட்க வேண்டியுள்ளது. இதைக் கொஞ்சம் கவனிங்க சகோதரா.

இங்கே குறிஞ்சிமேடு இன்ஸ்பெக்டர் அனிதா ராவ் கேரக்டருக்கு நல்ல உயரம், லைட்டா சதைப்பிடிப்புடன் உடல்வாகு, செம மிடுக்கு, சில நேரங்களில் கடுகடுப்பு என கனகச்சிதமாக மேட்ச் ஆகிவியிருக்கிறார் சஞ்சனா நடராஜன். ”துபாய் போலீஸ் எப்படி தெரியுமா?”ன்னு  ஸ்ருஷ்டி சொல்லும் போது, “துபாயில இப்படித்தான் ராத்திரியில குழந்தைகளை ஐஸ்கிரீம் சாப்பிட அனுப்புவீங்களா?” என பொளேர் பதில் சொல்லுமிடம் இங்கே விசாரிக்க வந்த அர்ஜுன் தாஸிடம் ஆரம்பத்தில் எரிச்சல் காட்டி, பின் கூலிங் ஆவது என சபாஷ் சஞ்சனா.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

'John Doe'இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக ஸ்ருஷ்டியின் முகத்தில் எப்போதும் மென்சோகம், ஷாரா வினீத் தன்னிடம் கடுமையாக பேசும் போதெல்லாம் தவிப்பு, நீரவ் காணாமல் போனதும் படபடப்பு என ஸ்ருஷ்டியின் நடிப்பும் ஓகே.

ஸ்ருஷ்டியின் தோழியாக அனுபமா குமார் வருகிறார். இவரது கணவராக க்ளைமாக்ஸில் வரும் ஜெயப்பிரகாஷ் தான் படத்தின் ட்விஸ்ட்டே. ஆனால் அந்த ட்விஸ்ட் ரொம்பவும் வீக்காப் போச்சு. அனுபமா ஏன் திடீர்னு காரை ஸ்டார்ட் பண்ணி தண்ணீருக்குள் போகிறார்? அவருக்கு மனநல பாதிப்பாங்கிறது நமக்குத் தெரியல. கருப்பு லிப்ஸ்டிக்குடன் ஷாரா வினீத்தின் லுக்கே கொஞ்சம் டிஃபெரெண்டாவும் டிரக் அடிக்கிட்டா டெரர்ராவும் இருக்கு. நாக்கு அறுக்கப்பட்ட பிச்சைக்காரன், கார் மெக்கானிக், மனநலமருத்துவராக கார்த்திக் குமார் என சில கேரக்டர்களுக்கு நல்ல வடிவம் கொடுத்திருக்கார் டைரக்டர் மதுமிதா.

நாம் எதிர்பார்த்தது போலவே இடைவேளை விடும் நேரத்தில் மாஸ்டர் நீரவ் உயிருடன் வருகிறான். அதுக்குப் பிறகு தானே  ஜெயப்பிரகாஷின் ஃப்ளாஷ் பேக் வைக்க முடியும். சில சீன்கள் லேசாக தொய்வு ஏற்படும் போதெல்லாம் முஜீப் மஜீத் & தி ஆர்ட்டிஸ்ட் 404-ன் பேக்ரவுண்ட் ஸ்கோர் டெம்போ ஏற்றுகிறது. மலைப்பிரதேசங்களில் கதை நடப்பதால் ப்ரீத்தான் ஜெயராமனின் ஒளிப்பதிவு பக்கா சப்போர்ட்டாக இருக்கு.

‘ஜான் டோ’ சிங்கிள் ஓகே.

அங்குசம் பார்வையில் ‘ஜான் டோ’ 45/100

—   ஆண்டவர் 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.