எட்டுமாசமா எட்டிப்பார்க்காத டாக்டர் ! ஆடுவதைக்கூட சர்ச்சை !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

”நல்ல ஆடுகளைத்தான் தினம் வெட்டுகிறார்களா? இல்லை, சீக்கு வந்த ஆடுகளை வெட்டி விற்பணை செய்கிறார்களா?” என்பதாக பகீர் கிளப்புகிறார்கள் மதுரை ஏரியாவில்.

மதுரை மாநகர் மையப்பகுதியில் நெல்பேட்டையில், ஆடுவதைக்கூடம் இயங்கிவருகிறது. இது மதுரை மாநகரிலேயே பாரம்பரியமாக இயங்கிவரும் ஆடுவதைக்கூடங்களில் ஒன்று. 1944 ஆம் ஆண்டு முதலாகவே இயங்கிவரும் இந்த ஆடுவதைக்கூடம் தற்போது மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஆடுவதைக்கூட சர்ச்சை !“இங்கே, அறுவைக்கு கொண்டுவரப்படும் ஆடுகள் மக்கள் உண்ணத் தகுதியானவைதானா? வேறு எந்தவிதமான நோய்த் தாக்குதலுக்கும் ஆளாகியிருக்கின்றனவா? என்பதை பரிசோதித்து, அதன் தரத்தை உறுதிபடுத்தும் பொறுப்பில் இருந்த கால்நடை மருத்துவர் கடந்த 8 மாதகாலமாக இல்லை. அவரது அலுவலகம் 8 மாதங்களாக பூட்டியே இருப்பதோடு, குப்பை கூழங்களால் சூழ்ந்திருக்கிறது. சிசிடிவி காமிராக்களும் பழுதாகியிருக்கின்றன. அப்படியெனில், இங்கே வெட்டப்படும் ஆடுகளின் தரத்தை யார் உறுதிபடுத்துவது? இதனை மாநகராட்சி ஆணையர், சுகாதாரத்துறை, முதல்வரின் தனிப்பிரிவு வரையில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரையில் இல்லை” என்பதாக குற்றஞ்சாட்டுகிறார், இந்திய யூனியன் முஸ்லீக் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஜாகீர் ஹூசைன்.

ஒன்னு டாக்டரை போடுங்க.. இல்லையா, அதுவரைக்கும் ஆடு வெட்டக்கூடாதுனு தடையாவது போடுங்க! மக்கள் உணவு விசயத்திலும், உயிர் விசயத்திலும் இவ்வளவு அலட்சியம் காட்டலாமா, ஆபிசர்ஸ்?

—     ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.