‘பாம்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் கோலாகலம் !

0

அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில், விஷால் வெங்கட் இயக்கத்தில், GEMBRIO PICTURES நிறுவனத்தின் முதல் தயாரிப்பு “பாம்” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

‘பாம்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் கோலாகலம்!

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர், காளி வெங்கட், அபிராமி, சிங்கம்புலி, பால சரவணன், டி.எஸ்.கே., கிச்சா ரவி, பூவையார், முதன்மை பாத்திரங்களில் நடிக்க, சில நேரங்களில் சில மனிதர்கள் படப்புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், கம்ர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் ‘பாம்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எஸ் ஆர் எம் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், இசை நடன நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக வெளியிடப்பட்டது .

Bomb First Look Launch
Bomb First Look Launch

இவ்விழாவினில் பேசிய சிலர்… தயாரிப்பாளர் சுதா சுகுமார்

“எங்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இப்படம். நல்ல குழுவின் உழைப்பில், மிகச் சிறந்த படைப்பாக இப்படம் வந்துள்ளது. இப்பட டீம் அனைவருக்கும் என் நன்றிகள். கதை கேட்டபோதே மிகவும் பிடித்தது. மாணவர்கள் மத்தியில் பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவது மகிழ்ச்சி. இமான் சார் சிறப்பான இசையை தந்துள்ளார். படம் உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும். அனைவருக்கும் நன்றி”.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

ஷிவாத்மிகா ராஜசேகர், “இயக்குநர் விஷால் ஒரு அற்புதமான கதையை எழுதியுள்ளார், நாசர் சார் மற்றும் அர்ஜுன் தாஸுடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, எங்கள் டீம் சார்பாக உங்களுக்கு நன்றி. படம் மிக அட்டகாசமாக வந்துள்ளது”.

இயக்குநர் விஷால் வெங்கட் “இதே கல்லூரியில் நானும் சுற்றிக் கொண்டிருந்தேன், இப்போது உங்கள் முன்னால் எங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவது மகிழ்ச்சி. நிச்சயம் இது சுவாரஸ்யமான படமாக இருக்கும், ஃபன் எண்டர்டெயின்மெண்டாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். அனைத்திற்கும் டெக்னிக்கல் குழுதான் காரணம். இமான் சார் எனக்கு அண்ணன் போல அவருக்கு எனது நன்றி. அர்ஜுன் தாஸ் மற்றும் ஷிவாத்மிகா உங்களுக்கும் நன்றி. GEMBRIO நிறுவனத்திற்கு என் நன்றிகள். எங்கள் இளம் குழுவிற்கு ஆதரவைத் தரும் உங்கள் அனைவருக்கும் நன்றி”.

அர்ஜுன் தாஸ்
அர்ஜுன் தாஸ்

இமான் “உங்கள் கனவுகள் நனவாக என் வாழ்த்துக்கள். இது ரொம்பவும் சுவாரஸ்யமான படம்.
GEMBRIO நிறுவனத்தின் முதல் படத் தயாரிப்பில் நான் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. விஷால் இன்னும் நல்ல படங்கள் செய்வார் பெரிய இடத்திற்கு செல்வார். அர்ஜுன் தாஸ் இன்னும் பல உயரம் தொட வாழ்த்துக்கள். ஷிவாத்மிகா உங்கள் அப்பாவின் பெயரைக் காப்பாற்றி வருவதற்கு வாழ்த்துக்கள். படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துகள். படம் மிக நல்ல படமாக வந்துள்ளது. மேஜிக்கல் எண்டர்டெயினராக இருக்கும். தயாரிப்பாளர் சுதாவிற்கு வாழ்த்துக்கள் “.

அர்ஜூன் தாஸ்
“இது எனக்கு ஸ்பெஷலான படம்.கதை கேட்டவுடன் எனக்குப் பிடித்தது. இமான் சார் இப்படத்தில் ஒப்புக்கொண்டு இசையமைத்தது மகிழ்ச்சி. அவர் தான் இக்கதைக்கு நான் சரியாக இருப்பேன் எனறு கூறியுள்ளார். ஷிவாத்மிகாவிற்கு வாழ்த்துக்கள்.
ஜெம்பிரியோ நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இப்படம். இன்னும் நிறைய நல்ல படம் செய்ய வாழ்த்துக்கள். இந்தப்படம் மிக ஜாலியான படமாக வந்துள்ளது, உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்”.

நடிகர்கள்
அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பால சரவணன்.

தொழில் நுட்பக் கலைஞர்கள்:
கதை & திரைக்கதை – மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன், விஷால் வெங்கட்
வசனம் – மகிழ்நன்
ஒளிப்பதிவு – பி.எம். ராஜ்குமார்
படத்தொகுப்பு – ஜி.கே. பிரசன்னா
கலை இயக்கம் – மனோஜ் குமார்
உடை வடிவமைப்பு – பிரியா ஹரி, பிரியா கரண்
நடனம்- அப்ஸர்
சண்டைப்பயிற்சி – முகேஷ்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
நிர்வாகத் தயாரிப்பாளர் – D சரவண குமார்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.