புக் ஃபேர் ( BOOK fair ) பரிதாபம் !

0
எதிர்முனை: நான் —- பேசறேன். நீங்க சுகிர்தராணிதானே பேசறது?
நான்: ஆமாங்க மேடம்.என்ன விஷயம் சொல்லுங்க ..
எதிர்முனை: இந்த தேதியிலிருந்து இந்த தேதிவரை இந்த எடத்துல புக் ஃபேர் நடக்குது.. எங்கிட்டத்தான் எல்லாத்தையும் ஒப்படைச்சிருங்காங்க.. சாயந்திரம் அஞ்சு மணியிலிருந்து எட்டு மணி வரைக்கும் கலைநிகழ்ச்சி, பேச்சாளர்ங்க பேசறாங்க!!
நான்: அமைதி
எதிர்முனை: தமிழ் அரங்குல என்னிக்கினா ஒருநாள் நீங்க வந்து பேசணும்.. சாயந்திரம் 6.30 மணியிலிருந்து 7.10 வரை. 35 நிமிஷம் நீங்க பேசலாம்.
நான்: அமைதி
எதிர்முனை: என்னிக்கு வறீங்க? என்ன தலைப்பு? இன்னிக்கு சாயந்திரத்துக்குள்ள சொல்லிடுங்க..
அப்படியே உங்க போட்டோ ஒன்னு அனுப்பிடுங்க..
நான்: அமைதி
எதிர்முனை: இன்னும் ரெண்டுநாளுல இன்விடேஷன் ரெடி செஞ்சிடணும்
நான்: அமைதி..
எதிர்முனை: உங்களுக்குத் தெரிஞ்ச ரெண்டு பேச்சாளர் பேரச் சொல்றீங்களா?அப்படியே அவங்க தலைப்பு..அவங்க போட்டோவும் அனுப்பிடறீங்களா?
நான்: மேடம்..எனக்குப் பேச்சாளர்களைத் தெரியாது..நான் கவிஞர்ங்க மேடம்.எனக்கு எழுத்தாளர்களையும் இலக்கியவாதிகளையும்தான் தெரியும்..
எதிர்முனை: சரிங்க ..பரவாயில்லை.. அவங்க பேரையாவது அனுப்பி வைங்க..இன்னிக்குள்ள அனுப்பிடுங்க..
நான்: வாயடைச்சி நின்னாச்சு.. !
எதிர்முனை: போன் வைச்சாச்சு..
குறிப்பு: அந்த மேடம் ஒரு பள்ளி ஆசிரியர். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் அளவுக்கு என்ன செய்திருக்கிறார் என்று தெரியவில்லை.
புக் ஃபேர் பரிதாபம்.
கவிஞர்-சுகிர்தராணி
Leave A Reply

Your email address will not be published.