குறுகிய கால சிகிச்சை மூலம் பெருமளவு மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்தலாம் – கல்லூரி மாணவியர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு ! .
குறுகிய கால சிகிச்சை மூலம் பெருமளவு மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்தலாம் – கல்லூரி மாணவியர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு ! .
மருத்துவருடன் ஆலோசனை செய்து குறுகிய காலம் மட்டுமே சிகிச்சை எடுத்து கொள்வதன் மூலம் பெருமளவு மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்த முடியும் – செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவியருக்கானக் கருத்தரங்கில் மூத்த புற்றுநோயியல் நிபுணர் பேச்சு
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் மாணவியர் நலக்குழு சார்பாக மார்பகப் புற்றுநோய் பற்றிய மாணவிகளுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது. செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர் வாழ்த்துரை வழங்கினார். திருச்சி ஜி.வி.என் ரிவர்சைடு மருத்துவமனை மூத்த புற்றுநோயியல் நிபுணர் டாக்டர். எஸ். சேவியர் எம்.டி., டி.எம்.ஆர்.டி மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.
அவர் உரையில், ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் மூலம் மார்பகப் புற்று நோய் வராமல் பெருமளவில் உடல் எடையைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். அதிக எடையுடன் இருப்பது மார்பக புற்றுநோயை அதிகரிக்க செய்கிறது. உடலை வருத்தி இதைச் செய்யவேண்டும் என்பதில்லை.
அன்றாடம் 30 நிமிடங்கள் வரை செய்யகூடிய உடற்பயிற்சி பெண்களது ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவக்கூடும். மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலகட்டத்தில் ஹார்மோன் சிகிச்சை மெற்கொள்ளும்போது அதிகப்படியாக ஹார்மோன் சிகிச்சை எடுத்தல் மார்பக புற்றுநோயுடன் தொடர்பில் உள்ளது.
அதனால் மருத்துவருடன் ஆலோசனை செய்து மருத்துவருடன் குறுகிய காலம் மட்டுமே சிகிச்சை எடுத்துகொள்வதன் மூலம் பெருமளவு மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்த முடியும்.க்ஷ போன்ற பல கருத்துக்களைப் பதிவு செய்தார்.முன்னதாக முனைவர் மேகி டயானா வரவேற்புரையாற்றினார்.. நிறைவில் முனைவர் ஏஞ்சல் பிரீத்தி நன்றியுரையாற்றினார். இக்கருத்தரங்கில் 523 மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடைந்தனர்.
– ஆதன்