அமைச்சர்கள் கல்வித்துறை இயக்குநர்களின் பங்கேற்போடு ”ஆசிரியர்களுடன் அன்பில் ”

உங்களிலிருந்து தான் நானும் உயர்ந்திருக்கிறேன். உங்களில் நானும் ஒருவன் என்ற ரீதியில் ஆர்ப்பாட்டமில்லாத பேச்சால்......

0
dear movie banner

கல்வித்துறை இயக்குநர்களின் பங்கேற்போடு ”ஆசிரியர்களுடன் அன்பில் – நம்மில் ஒருவர்” நிகழ்வு !

திருச்சி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பு நடத்திய ”ஆசிரியர்களுடன் அன்பில் – நம்மில் ஒருவர்” நிகழ்ச்சி திருச்சி கலையரங்கம் திருமண மஹாலில் அக்-07 சனிக்கிழமை மாலை நேர நிகழ்வாக நடைபெற்றது.
பத்து நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த ஆசிரியர்களின் போராட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், ஆசிரியர்களை ஒருங்கிணைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்போடு நடைபெற்றுள்ள இந்நிகழ்வு முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.

Happy homes
ஆசிரியர் - அன்பில்
ஆசிரியர் – அன்பில்
- Advertisement -

- Advertisement -

திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் ஐ.ஏ.எஸ்., தலைமையில் தொடங்கிய இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக கல்வி மு.சிவக்குமார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இதனைத்தொடர்ந்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளை தாங்கிய ”ஆசிரியர் மனசுப் பெட்டி”யை திறந்து வைத்து உரையாற்றினார்.

இந்நிகழ்வில், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர் தங்கம் மூர்த்தி, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் வை.குமார், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் க.அறிவொளி, ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதிஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். விழா தொடக்கம் முதலாக இறுதிவரையில் பங்கேற்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நிறைவுரையாற்றினார்.

அரங்கு நிரம்பி வழிந்த ஆசிரியர்கள்
அரங்கு நிரம்பி வழிந்த ஆசிரியர்கள்
3 kavi national

ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த தங்களது கருத்துக்களை கோரிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ”ஆசிரியர் மனசு” திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இதற்கு முன்னர், ”ஆசிரியர்களுடன் அன்பில்” என்ற நிகழ்வையும் கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தியிருக்கின்றனர்.

7 bismi bise almathina

ஆசிரியர் போராட்டத்தின் தணல் இன்னும் ஆறாத நிலையில், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள் மட்டுமன்றி பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்களே நேரடியாக பங்கேற்றிருக்கிறார்கள் என்பதுதான் இந்நிகழ்வின் ”ஹைலைட்”!

 

ஆசிரியர்களுடன் அன்பில் (2)
ஆசிரியர்களுடன் அன்பில் (2)

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரங்கம் நிறைந்து வழிய பங்கேற்றிருந்தனர். சென்னை தலைமையகத்தில், டி.பி.ஐ. வளாகத்தில் அமர்ந்திருக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் என்றாலே, கடுமை காட்டுபவர்கள்; கறார் பேர்வழிகள் என்றிருந்த எண்ணத்தை சற்று தளர்த்தியிருக்கும் என்றே சொல்லலாம்.

சமூகத்தில் ஆசிரியர் என்ற சொல்லுக்கு இருக்கும் மதிப்பை பல்வேறு யதார்த்தமான உதாரணங்களோடு எடுத்துரைத்தவர்; அதிகாரிகளின் ரெய்டு நடவடிக்கைகளால் தலைமையாசிரியர்கள் பதறிப்போன சம்பவங்களையெல்லாம் சுட்டிக்காட்டி அதிகாரிகளுக்கும் ஆசிரியர்களுக்குமான உறவை தொட்டுப்பேசியவர் மேடைப் பேச்சாளருக்கு நிகரான ஜனரஞ்சகமான உரையால் அரங்கத்தை கலகலப்பாக்கினார். இணை இயக்குநர் குமார்.

”ஆசிரியர்களின் போராட்டத்தின் பொழுது, கழிவறைகளின் தூய்மை குறித்தும், பயன்பாட்டுக்கான நீர்த்தேவை உள்ளிட்டு அக்கறையோடு கேட்டறிந்தவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். குடிநீருக்கு என்ன செய்கிறார்கள்? அதனை நாமே வழங்கலாமே. என்று ஆலோசனை சொன்னவர்.

ஆசிரியர் மனசு....
ஆசிரியர் மனசு….

இப்படிப்பட்ட அமைச்சரை வைத்துக்கொண்டு இணக்கமாக பேசியே உங்களுக்கான கோரிக்கைகளை வென்றெடுத்துக் கொள்ளலாம்.” என்று சுட்டிக்காட்டிய இயக்குநர் முனைவர் க.அறிவொளி; உங்களிலிருந்து தான் நானும் உயர்ந்திருக்கிறேன். உங்களில் நானும் ஒருவன் என்ற ரீதியில் ஆர்ப்பாட்டமில்லாத பேச்சால் அரங்கை உறைய வைத்தார்.

“உங்களது போராட்டத்தில் நியாயம் இருக்கிறது. நீங்கள் போராட்டம் நடத்தினீர்கள் என்பதாக பார்க்கவில்லை. உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினீர்கள் என்பதாகத்தான் எடுத்துக்கொள்கிறேன். கலெக்டர்கள் மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுதுகூட, அப்போது கிடைத்த அரை மணி நேர ஓய்வு நேரத்தில் கூட என்னையும் கல்வித்துறை – நிதித்துறை அதிகாரிகளையும் அழைத்து பேசினார்.

சட்டசபையில் நடைபெறும் மானியக்கோரிக்கை போல அந்த உரையாடல் அமைந்திருந்தது. இப்படி செய்துவிடலாமே, அப்படி செய்யலாமே என்று சொல்வது எளிது. நிதி நிலைமை, நீதிமன்றத்தில் உள்ள பல்வேறு வழக்குகள் இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு தான் அரசு முடிவெடுக்க முடியும்.

ஆசிரியர்களுடன் அன்பில்
ஆசிரியர்களுடன் அன்பில்

ஆசிரியர் மனசு வழியே கிடைக்கப்பெறும் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து நிறைவேற்றி வருகிறோம். போராட்டம் என்ற பெயரில் உங்களை வருத்திக்கொள்ளாதீர்கள் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன்.” என நெகிழ்ச்சியாக பேசி விழாவை நிறைவு செய்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

வே.தினகரன்.

3 kavi national
Leave A Reply

Your email address will not be published.