விவசாயியை தாக்கிய விவகாரம் பூதாகரமாய் வெடிக்கும் பிரச்சினை அதிகாரிகள் பீதி !

0

விவசாயியை தாக்கிய விவகாரம் பூதாகரமாய் வெடிக்கும் பிரச்சினை அதிகாரிகள் பீதி !

விவசாயி தாக்கிய விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகள் ஆயுதப்படைக்கு மாற்றம் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்குளம் பகுதியில், மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது,

இந்த கிராம சபை கூட்டத்தில் விவசாயி அம்மையப்பன் என்பவர் ஊராட்சி செயலாளர் மீது ஊழல் புகார் இருந்து அவர் வேறு பகுதிக்கு பணி மாறுதல் பெற்ற பின்பு எவ்வாறு இங்கு பணிபுரிகிறார், என்று கேள்வி கேட்ட விவசாயி மார்பில் அறுவை சிகிச்சை செய்த பகுதியில் எட்டி உதைத்தார், ஊராட்சி செயலாளர் தங்க பாண்டியன், இந்த விவகாரத்தில் விவசாயியை கன்னத்தில் தாக்கிய ஊராட்சி செயலாளர் கூட்டாளியான ராஜ் என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்,

மேலும் தலைமறைவாக இருந்த ஊராட்சி செயலாளர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர். தங்கபாண்டியனை தேடி வந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். இவருக்கு ஜாமீன் வழங்கிய விவகாரம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது,

- Advertisement -

- Advertisement -

4 bismi svs

அதேபோல் நீதிமன்றத்தில் தங்கபாண்டியனுக்கு ஜாமின் வழங்க காவல்துறை தரப்பில் போதிய எதிர்ப்பும் ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என சொல்லப்படுகிறது, இந்த நிலையில் காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன், மற்றும் உதவி ஆய்வாளர் செல்லபாண்டி ஆகிய இருவரையும், விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆயுதப் படைக்கு பணி மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறையினர் மீதான நடவடிக்கை ஒரு பக்கம் இருக்க மற்றொருபுறம் பிள்ளையார்குளம் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதேவி மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் முத்துலட்சுமி, ஆகிய இருவரும் இந்த சம்பவம் தொடர்பாக முறையாக தகவல் தெரிவிக்காததால், இவர்களிடம் விளக்கம் கேட்டு வட்டாட்சியர் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸ் இருக்கு 15 தினங்களுக்குள் முறையாக பதில் அளிக்காவிட்டால் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் செந்தில் தெரிவித்துள்ளார்.

இதேபோல் விவசாயி தாக்கிய விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியனை நிரந்தரமாக பணி நீக்கம் செய்யக்கோரி பல்வேறு அமைப்பைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வருகின்ற 09ம் தேதி திங்கட்கிழமை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் தன் அதிகாரத்தையும் பண பலத்தையும் பயன்படுத்தி, எல்லாவித பிரச்சினையிலும் இருந்து தப்பித்து விடலாம் என எண்ணி இருந்த நேரத்தில், அதற்கு மாறாக இவரால் அனைத்து துறை அதிகாரிகளும் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.