நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் !
காமராஜர் பிறந்த தினத்தில் கல்வி திருவிழாவாக கொண்டாட வருகை புரிந்த அமைச்சர் கே. என். நேருவிற்கு நன்றி நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருச்சி தென்னூர் அருகில் உள்ள ஹோட்டல் ஷான்ஸில் பொதுச் செயலாளர் ஜெடிஆர்.சுரேஷ் தலைமையில் நடந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மேலான் துணைத் தலைவர் இரா.தங்கையா, தொழிலதிபர் ஆர் சீனிவாசன், ராஜசேகரன் நாடார் பார்ம், பாலக்கரை நாடார் இளைஞர் சங்கத் தலைவர் அய்யனார், பெரிய நாடார், தலைவர் எஸ்.பி. முருகன், பொருளாளர் ஆண்ட்ரூஸ்.எஸ்.கிங்ஸ்லி துணைத்தலைவர்கள் ஆழ்வார் தோப்பு ஜெயராஜ், டி.கமல்தாஸ், ஸ்ரீரங்கம் செல்வகுமார், துணை பொதுச்செயலாளர்கள் அய்யனார் பொன்ராஜ், கிங்ஸ்டன், புங்கனூர் மகாராஜன்,உள்ளிட்டஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஜூலை 15ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை கல்வி திருவிழாவாக கொண்டாட வருகை புரிந்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேருவிற்கு கூட்டத்தின் வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்வது, நெல்லை நாடார் உறவின்முறை சங்கத்திற்கு அதிக அளவில் உறுப்பினர் சேர்க்கை வேண்டும்.
மேலும் செயற்குழு கூட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டும்.என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.