உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை – பணம் கொள்ளை

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை – பணம் கொள்ளை

 

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை – பணம் கொள்ளை போன சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Frontline hospital Trichy

சென்னை அடுத்த புழல் அருகே வழக்கறிஞர்  வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்தனர். சென்னை அடுத்த புழல் ரங்கா அவென்யூ மூன்றாவது தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் வயது 38 இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

 

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இவரது மனைவி சண்முகப்பிரியா. கடந்த 18 ஆம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு சொந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு பகுதிக்கு குடும்பத்துடன் சென்றார். நேற்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மர்ம ஆசாமிகள் பீரோவை உடைத்து அதிலிருந்து 80 சவரன் தங்க நகைகள் ஐம்பதாயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

 

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இது குறித்து பார்த்திபன் போலீசில் புகார் செய்தார். கொளத்தூர் துணை கமிஷனர் ராஜா ராம் புழல் உதவி கமிஷனர் ஆதிமூலம் மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

 

மோப்பநாய் வரவழைக்கப்பட்ட நிலையில் அரை கிலோ தூரம் சென்று நின்று விட்டது, யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை போலீசார் ரேகைகளை பதிவு செய்துள்ளனர். இந்த கொள்ளை சம்பளம் குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.