பஃபேட் ரைஸ் கட்லட்! சமையல் குறிப்பு – 32

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு பாக்க போற ரெசிபி ஆயுத பூஜைக்கு மீதியான பொரிய வச்சு தாங்க பண்ண போறோம். அதை வேஸ்ட் பண்ணாம நம்ப அம்மாக்கள் காரப் பொரி வறுத்து கொடுப்பாங்க. அதுல கார பொறி மட்டும் செய்யாம இப்போ பொரியில புதுசா கட்லெட் பண்ண போறோம். சரி வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

இந்த வார அங்குசம் வார இதழில்…

பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கிய 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 3 ஸ்பூன், சோள மாவு 1 ஸ்பூன், சீரகம் 1 ஸ்பூன், கரம் மசாலா 1 ஸ்பூன், மல்லித்தூள் 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு, பொரி 2 கப்.

பஃபேட் ரைஸ் கட்லட்
பஃபேட் ரைஸ் கட்லட்

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் பொரியை கழுவி வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கடலை மாவு, சோள மாவு, கரம் மசாலா, மல்லித்தூள், உப்பு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கட்லெட் வடிவில் தட்டி வைத்துக் கொள்ளவும், அதன் பின் ஒரு தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் தட்டி வைத்த கட்லெட்டை வைத்து இரண்டு புறமும் பொன்னிறமாகும் வரை மிதமான சூட்டில் வேகவைத்து எடுக்கவும்.

இப்போது சுவையான பொரி கட்லட் தயார். இதனை மயோனைஸ் அல்லது டொமேட்டோ சாஸ் உடன் தொட்டு சாப்பிடலாம்.

 

–   பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.