‘பன் பட்டர் ஜாம்’ பெட்டரா இருக்குமா?
அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான சுரேஷ் சுப்பிரமணியம் என்பவர், ‘ரெய்ன் ஆஃப் ஆரோஸ்’ பேனரில் தனது கதையில் தயாரித்துள்ள படம் ‘பன் பட்டர் ஜாம். ராகவ் மிர்தாத் டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தில் ‘பிக்பாஸ்-5’ வின்னரான ராஜு ஜெயமோகன் ஹீரோவாக எண்ட்ரியாகிறார். ஹீரோயின்களாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா ஆகியோரும் மற்ற கேரக்டர்களில் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, வி.ஜே.பப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவு : பாபு, எடிட்டிங்: ஜான் ஆபிரஹாம், இசை : நிவாஸ் கே.பிரசன்னா, பி.ஆர்.ஓ. : ஜான்சன்.
“சினிமாவில் முதல் வாய்ப்பு கிடைக்க காரணமான பிக்பாஸுக்கும் எனக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்த மக்களுக்கும் நன்றி. டைரக்டர் ராகவ் மிர்தாத் எனக்கு நல்ல கிரவுண்டை தயார்படுத்திக் கொடுத்துள்ளார். படத்தில் தேவையில்லாத விசயங்களைச் சொல்லி, உங்களை இம்சை பண்ணாம, உங்க நேரத்தை வீண்டிக்காம ஒரு பெட்டர் படத்தைக் கொடுத்திருக்கோம்” என்றார் ஹீரோ ராஜு ஜெயமோகன்.
“எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் சினிவாலா சதீஷ் மூலமாத்தான் இந்த வாய்ப்பு வந்தது. தயாரிப்பாளர்சுரேஷ் சுப்பிரமணியத்தின் ஒன்லைனைத் தான் நான் டெவலப் பண்ணியுள்ளேன். மிகவும் அற்புதமான மனிதர் அவர். எனது முதல் படம் ஃபெயிலியராகி, சினிமாவைவிட்டே ஓடிரலாம்னு நான் நினைச்சப்ப வந்த வாய்ப்பு தான் இந்தப்படம். இப்ப கிடைத்திருப்பதை கெட்டியாகப் பிடித்து ‘பன் பட்டர் ஜாமை’ பெட்டராக கொடுத்துள்ளேன். உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார் டைரக்டர் ராகவ் மிர்தாத்.
நடிகர் சார்லி, சரண்யா பொன்வண்ணன், ஹீரோயின்கள் ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா, மியூசிக் டைரக்டர் நிவாஸ் கே.பிரசன்னா ஆகியோர் ‘பன் பட்டர் ஜாம்’ கண்டிப்பாக பெட்டராக இருக்கும் என நம்பிக்கையுடன் பேசினார்கள். வருகிற 18-ஆம் தேதி ரிலீசாகிறது ‘பன் பட்டர் ஜாம்’.
— மதுரை மாறன்