கம்போடியாவில் 4000 டாலருக்கு விற்கப்பட்டவர் மீட்பு ! மேலும் 400 பேர் உணவின்றி சிக்கி தவிப்பு
கம்போடியாவில் 4000 டாலருக்கு விற்கப்பட்டவர் மீட்பு ! மேலும் 400 பேர் உணவின்றி சிக்கி தவிப்பு
கம்போடியாவில் 4000 டாலருக்கு_விற்கப்பட்ட இந்திய பட்டதாரியை SDPI கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் இமாம்.R. அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி, தலைமையில் ,காவல் துறை உதவியுடன் தொடர் முயற்சிக்கு பின்பு இன்று திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.
அவரை SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி, மாவட்ட பொதுச் செயலாளர் தமீம் அன்சாரி,மாவட்டச் செயலாளர் ஏர்போர்ட் மஜீத்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்னகர் ரபீக் மற்றும் நிர்வாகிகள் வரவேற்று, பாதிக்கப்பட்டவரை அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டை சார்ந்த பட்டதாரி சையது என்பவர் திருச்சி ட்ராவெல் ஏஜென்டால் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றப்பட்டு கம்போடியாவில் உள்ள கம்பெனிக்கு விற்கப்பட்டார்.
படிப்பிற்கு ஏற்ப வேலை தராமல் சட்டத்துக்கு புறம்பான பணிகளை செய்யச் சொன்னதால் சையத் அந்த வேலையை செய்ய மறுத்துள்ளார். உடனே அவரை கடுமையாக தாக்கி உணவு கொடுக்காமல், துப்பாக்கி முனையில் பல கொடுமைகளை அங்கே அரங்கேற்றி உள்ளனர்.
சையத் உடனே எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளையும், திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையை தொடர்பு கொண்டு தன்னை மீட்குமாறு கோரிக்கை வைத்தார், இதன் அடிப்படையில் ஒரு மாத காலமாக பல்வேறு முயற்சிகளின் மூலமாக இன்று சையது மீட்கப்பட்டார், ஆனால் இதேபோன்று நானூருக்கும் மேற்பட்ட நபர்கள் அங்கே கொத்தடிமைகளாக இருப்பதாகவும், அவர்களையும் மீட்க வேண்டும் என்று மாநில முதல்வருக்கு SDPI கட்சி நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மீட்கப்பட்ட பட்டதாரி சையத் மற்றும் குடும்பத்தினர் தனக்கு உதவி செய்த SDPI கட்சி நிர்வாகிகளுக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இவரை போன்றே அங்கே பாதிக்கப்பட்ட மற்ற நபர்களையும் மீட்க அரசுடன் இணைந்து சட்டரீதியான பணிகளை மேற்கொள்வோம் என்று SDPI கட்சியினுடைய மாநில செயற்குழு உறுப்பினர் இமாம் R. அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி தெரிவித்தார்.
புதுககோட்டையைச் சேர்ந்தவர் சையது இப்ராகிம் (வயது 28). இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் வணிக விசாவில் கடந்த ஜூலை மாதம் ரூ.3 லட்சம் செலவு செய்து கம்போடியா சென்றேன்.
என்னை திருச்சி தில்லைநகர் பகுதியை சேர்ந்த ட்ராவெல் நிறுவனத்தினர் அங்கு அனுப்பி வைத்தனர். கம்போடியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் என்னை 4 ஆயிரம் டாலருக்கு விற்பனை செய்தார். அங்கு எனக்கு உரிய வேலை ஏதும் கொடுக்கவில்லை.
ஆயிரம் டாலர் சம்பளம் கொடுப்பேன் என்று கூறிவிட்டு, சம்பளம் கொடுக்காமல் திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்தினர். ஏதேனும் உதவி தேவை என்று கேட்டால் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
நான் முதலில் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினருக்கு தகவல் தெரிவித்தேன்.
பல்வேறு முயற்சிகளுக்கு இடையே எஸ்.டி.பி.ஐ. கட்சியினரின் உதவியுடன் திருச்சி வந்து சேர்ந்தேன்.
தமிழகத்தை சேர்ந்த 400 பேர்
தமிழகத்தை சேர்ந்த இன்னும் 400-க்கும் மேற்பட்டோர் கம்போடியாவில் சிக்கி தவித்து வருகின்றனர். அங்கு அவர்கள் சொல்லும் சமூக விரோத வேலையை செய்யவில்லை என்றால் அடிப்பது, உணவை கொடுக்காமல் விடுவது, மின்சாரத்தை உடலில் பாய்ச்சுவது போன்ற கொடுமைகளை செய்கின்றனர். அதற்கான வீடியோ என்னிடம் உள்ளது. துப்பாக்கி வைத்து மிரட்டுகின்றனர்.
இந்திய தூதரகத்தை சேர்ந்தவர்களே அவர்களிடம் பேச பயப்படுகிறார்கள். இப்போது தான் மீட்பதற்கு முயற்சி செய்கின்றனர். கம்போடியாவில் உணவின்றி தவிக்கும் எல்லோரையும் காப்பாற்ற வேண்டும்
கம்போடியா குறித்து அங்குசம் இதழில் ஏற்கனவே வெளியான கட்டுரை