பிரபல தொண்டு நிறுவனம் இயக்குநர் அன்பாலயம் செந்தில்குமார் போக்சோ வழக்கில் கைது 😱

0

பிரபல தொண்டு நிறுவனம் இயக்குநர்  போக்சோ வழக்கில் கைது..

 

திருச்சி மாவட்டம் நவல்பட்டு குண்டூர் பகுதியில் அன்பாலயம் என்கிற மனநல காப்பகத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களை தங்கி வருகின்றனர்.

https://businesstrichy.com/the-royal-mahal/

காப்பகத்தில் செந்தில்குமார் என்பவர் நடத்தி வருகிறார் .
இங்கே 18 வயதுக்கு உட்பட்ட 3 குழந்தைகள் இருப்பதாகவும் அதில் ஒரு குழந்தைக்கு பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வந்திருக்கிறது.

இதனை அடுத்து குழந்தைகள் நலக்குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட குழந்தை தடுப்பு பிரிவு நவல்பட்டு காவல் ஆய்வாளர் மற்றும் சைல்ட் லைன் குழுவினர் காப்பகத்தில் நடத்திய தீடிர் ஆய்வு போது இளம் சிலர் குழந்தைகள் நல குழு அனுமதி பெறாமல் வைத்திருந்த மூன்று பெண் குழந்தைகள் 16 வயது,  15 வயது,  7 வயது, ஆகிய குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

16 வயது குழந்தை பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

அன்பாலயம் செந்தில்

16 வயது குழந்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

15 வயது குழந்தை பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் பள்ளி படிப்பில் தேர்ச்சி பெற்று மதிப்பெண் குறைவாக இருந்ததால் பதினோராம் வகுப்பு சேரவில்லை.

மேற்கண்ட இரண்டு சிறுமிகள் சிறுவயதில் இருந்தே அன்பாலயம் காப்பகத்தில் இருந்து படித்துள்ளனர்.

இரண்டு குழந்தைகளின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டு அன்பாலயம் மனநிலை காப்பதிலே உள்ளதாக விசாரணையில் தெரிகிறது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி CBSC வகுப்பு படித்து வருகிறார்.

முறையாக குழந்தைகள் நலக்குழுவில் சட்ட அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக குழந்தைகளை வளர்த்தும்,  பதினோராம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை அன்பாலயம் செந்தில்குமார் பாலியல் ரீதியாக துன்பப்படுத்தியும், பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளது என்பது வாக்குமூலமாக  விசாரணை தெரிந்துள்ளது.

மூன்று குழந்தைகளை முறையான அனுமதி இல்லாமல் வளர்த்ததற்காவும், பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தியதாக திருவரம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு , சட்ட விரோத குழந்தை வளர்ப்பு ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட குழந்தைகள் அன்னை ஆசிரமத்தில் பத்திரமாக சேர்க்கப்பட்டனர். குழந்தைகளை மீட்கும் பொழுது அங்கே இருந்த அன்பாலயம் செந்தில்குமார் குழந்தைகளின் வாக்குமூலத்தை தெரிந்து கொண்டதும் அங்கிருந்து தப்பி தற்போது தலைமறைவாக இருந்தவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார்..

அன்பாலயம் செந்தில்

அன்பாலயம் செந்தில்குமார் திருச்சியில் கிட்டதட்ட 25 வருடங்களுக்கு மேல் மனவளர்ச்சி குன்றியவர்கள் நலனுக்கு தொண்டு நிறுவனம் நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை மீது நடத்தப்படும் பாலியல் தாக்குதலுக்கு சாமனியருக்கு கிடைக்கும் தண்டனையை விட.. தொண்டு நிறுவனம் நடத்துவர்கள் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் இரண்டு மடங்கு தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிட தக்கது.

முன்ஜாமின் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் தற்காலிகமாக கைது செய்ய தடைவிதித்தது உத்தரவிட்டார். தினமும் திருவரம்பூர் மகளிர் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்தார்.

இதற்கு இடையில் பாதிக்கப்பட்ட வளர்ப்பு மகள் (16) திருச்சி நீதிமன்றத்தில் அன்பாலயம் செந்தில்குமாரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதை வாக்குமூலமாக பதிவு செய்தார்.

இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்தனர். இதனை அடுத்து அதிரடியாக அன்பாலயம் செந்தில்குமாரை கைது செய்தனர். திருவரம்பூர் போலிசார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.