அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சத்குருவிற்கு CIF  குளோபல் இந்தியன் விருது வழங்கிய ”கனடா-இந்தியா அறக்கட்டளை”

0

திருச்சியில் அடகு நகையை விற்க

ஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களுக்கு, CIF குளோபல் இந்தியன் விருது 2024’ வழங்கப்பட்டு உள்ளது. இவ்விருதினை இந்தியா- கனடா நாடுகளுக்கு இடையேயான இரு நாட்டு உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் இயங்கிவரும் அமைப்பான ‘கனடா இந்தியா அறக்கட்டளை’ வழங்கி உள்ளது. மேலும் இதற்கு நன்றி தெரிவித்துள்ள சத்குருஇ  இந்த விருதுடன் வழங்கப்படும் தொகையினை காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

உலகளவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தனிநபர்களைக் கொண்டாடும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகளவில் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிப்பதற்காக சத்குரு அவர்கள் தலைமை ஏற்று செய்து வரும் பணிகளை பாராட்டியும்இ விழிப்புணர்வான உலகத்தை உருவாக்குவதிலும்இ மனிதர்களின் விழிப்புணர்வை மேம்படுத்துதலிலும் அவரின் ஈடுஇணையற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

ஈஷா யோக மையம்
ஈஷா யோக மையம்

இது குறித்து கனடா இந்தியா அறக்கட்டளையின் தலைவரான ரித்தேஷ் மாலிக் அவர்கள் கூறுகையில்இ ‘ சத்குரு அவர்கள் இந்த விருதினை பெற ஒப்புக்கொண்டது மட்டுமில்லாமல் அதனை டொராண்டோவில் நடைபெறும் விழாவில் நேரில் பெற்றுக் கொள்ள சம்மதித்து இருப்பது உள்ளபடியே எங்களுக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறோம். சத்குரு மனிதர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கான நடைமுறை தீர்வுகளையும்இ மண் சிதைவுஇ காலநிலை மாற்றம் மற்றும் உணவின் தரம் போன்ற உலகளாவிய சவால்களுக்கு நீண்டகால தீர்வுகளையும் வழங்குகிறார்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சத்குரு போன்ற நற்சிந்தனைத் தலைவர்களிடமிருந்து கனடா பெரிதும் பயனடையும். சத்குருவின் போதனைகள்இ கனடா முன்னிறுத்தும் தனிநபர்களின் நல்வாழ்வுஇ நிலைத்தன்மை மற்றும் அனைவரையும் அரவனைத்துக் கொள்ளுதல் ஆகியவைகளோடு ஒன்றிப் போகின்றன. சத்குரு யோகாஇ தியானம் மற்றும் தெளிவான மனநிலை போன்றவற்றிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். இது குறிப்பாக மனநோய் பிரச்சனைகளின் சவால்களை எதிர்கொள்ளும் கனடாவின் சுகாதார அமைப்பின் முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகிறது.’ எனக் கூறியுள்ளார்.

விருது தொகையினை காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு வழங்குவதாக சத்குரு அறிவிப்பு!

ஈஷா யோக மையம்இந்த விருது வழங்கப்பட்டதற்காக சத்குரு அவர்கள் தனது நன்றியை (CIF)-க்கு தெரிவித்துக் கொண்டார். மேலும் விருதுடன் வழங்கப்படும் தொகையான கனடா நாட்டு மதிப்பில் CAD 50,000/- ஐ காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.

இது நம் பாரதத்தின் உயிர்நாடிகளான ஆறுகள் புத்துயிர் பெறுவதற்கான ஒரு திட்ட முன் மாதிரியை உருவாக்க செயல்பட்டு வருகிறது. குறிப்பாக விவசாய நிலங்களில் 242 கோடி மரங்களை நடுவதன் மூலம் காவிரி ஆற்றுக்கு புத்துயிர் அளிப்பது மற்றும் விவசாயிகளின் பொருளாதாரத்தை கணிசமாக மேம்படுத்துவது இதன் நோக்கமாக இருக்கிறது.

கனடா இந்தியா அறக்கட்டளை (CIF) என்பது கனடாவிற்கும்இ இந்தியாவிற்கும் இடையே வலுவான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இந்திய வம்சாவளித் தலைவர்களின் உலகளாவிய பங்களிப்புகளை முன்னிலைப்படுத்த (CIF) முக்கியப் பங்காற்றுவது குறிப்பிடத்தக்கது.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.