திருச்சியில் அடுத்தடுத்து நடக்கும் கார் கண்ணாடி உடைத்து திருட்டு !
திருச்சியில் அடுத்தடுத்து நடக்கும் கார் கண்ணாடி உடைத்து திருட்டு !
சென்னை மதுரை கோவை போன்ற பெரும் மாவட்டங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது திருச்சி மாவட்டம் குற்றச் சம்பவங்களில் குறைந்தே காணப்படுகிறது காரணம் காவல் துறையின் அதிரடி நடவடிக்கையும் கண்காணிப்பும் தான் என்று கூறுவதற்கு காரணம் 2500 காவலர்களை கொண்ட திருச்சி மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் காவல்துறை மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் அருகே உள்ள கட்டுப்பாட்டு அறையில் கவனிக்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம் குற்ற சம்பவங்கள் நடைபெறும் இடங்களிலும் தொடர்ச்சியாக காவல்துறையினர் ரோந்து சென்று வருவதால் கொலை கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்கப்படுகிறது.
இருப்பினும் கடந்த வருடத்தில் லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்திற்கு பிறகு காவல்துறை மூலம் திருச்சி மாநகரில் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் கடந்த சில நாட்களாக திருச்சி மாநகரில் மட்டும் குறிப்பாக மக்கள் நடமாடும் பகுதியில் கார் கண்ணாடிகளை உடைத்து காருக்குள் இருக்கும் பொருட்களை ஒரு மர்ம கும்பல் வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது இதுகுறித்து விசாரிக்க ஆரம்பித்த போது..
சமீபத்தில் திருச்சி ஒத்தக்கடை பகுதியில் மாலை 5 மணி அளவில் நின்றுகொண்டிருந்த இனோவா காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு அதனுள் உள்ள பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இதனை கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் இச்சம்பவத்தை செய்த மர்ம கும்பல் பற்றிய தகவல்களை சேகரித்து வருவதுடன் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்..
மேலும் நேற்று 04/10/2020 ஸ்ரீரங்கம் காவல் நிலைய உட்பட்ட பகுதியான அம்மா மண்டபத்தில் நேற்று திருவண்ணாமலையிலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தரிசனத்திற்காக காரில் வந்த குடும்பத்தினர் அம்மா மண்டபம் அருகே தனது காரை நிறுத்திவிட்டு குளிக்கச் சென்ற போது மர்ம கும்பல் ஒன்று காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த 2 செல்போன்கள் மற்றும் 2000 பணத்தினை திருடி விட்டுச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது..
மேலும் கடந்த வாரத்தில் திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி கோவில் செல்லும் வழியில் காலை பதினோரு மணி அளவில் ஒரு நபர் காரினை நிறுத்திவிட்டு பேப்பர் வாங்குவதற்காக சென்றுள்ளார் அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவர் காரில் புகுந்து பொருட்களை அப்படியே செய்துவிட்டு சென்றுள்ளது…
மேலும் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் பிரபல வழக்கறிஞர் ஒருவர் கார் ஒன்று நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றுள்ளார் அப்போது மர்ம கும்பல் ஒன்று அவரது காரினை மாற்றி திருட
முற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் எந்தவித புகாரும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாநகரில் எந்த மாநகரிலும் இல்லாத அனைத்துவித கூடுதல் பாதுகாப்பு மக்களுக்கு வழங்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் காவல்துறை மூலம் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் சமீப காலமாக இதுபோன்ற மர்ம கும்பல் ஒன்று தனது வேட்டையினை தைரியமாக செய்துவருவது பெரும் அச்சத்தை பொது மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது இதுதொடர்பாக காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…
-ஜித்தன்