அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அதிநவீன புற்றுநோய் சிகிச்சைகளுக்காக திருச்சியில்  காவேரி கேன்சர் இன்ஸ்டிட்யூட் ….

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தென் இந்தியாவின் முன்னணி பல்நோக்கு மருத்துவமனை குழுமமான காவேரி மருத்துவமனை  திருச்சியில் ஒரு பிரத்யேக புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் இதுவரை பெரிய நகரங்களில் மட்டுமே கிடைத்த அதிநவீன புற்றுநோய் சிகிச்சைகள் இனி திருச்சியிலும் கிடைக்கும்.

காவேரி கேன்சர் இன்ஸ்டிட்யூட் என்ற இந்த புதிய மருத்துவமனையில்  இம்யூனோ தெரபி மற்றும் துல்லிய கீமோதெரபி உட்பட பல்வேறு சிகிச்சைகளை வழங்குவதற்காக 50 படுக்கைகள் கொண்ட ஒரு பகல்நேர சிகிச்சை மையமும் உள்ளது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இம்மருத்துவமனையை தமிழகத்தின் நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்  கே.என். நேரு திறந்து வைத்தார். திருச்சி மேயர்  மு. அன்பழகன் , மத்திய மாவட்ட  திமுக செயலாளர் வைரமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

திருச்சியில்  காவேரி கேன்சர் இன்ஸ்டிட்யூட் ....இந்த புதிய மருத்துவமனையில், புற்று நோய்களை கண்டறிய அனைத்து தொழில்நுட்பங்களும் உள்ளன. மேலும் அறுவை சிகிச்சை, கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகளை திறம்பட வழங்குவதற்கு  அனுபவம் வாய்ந்த நிபுணர்களும் உள்ளனர்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

நகரிலேயே ட்ருபீம் (TrueBeam™) என்னும் மேம்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை அமைப்பு இம் மருத்துவமனையில் மட்டுமே உள்ளது. இதன் மூலம் மூளை, நுரையீரல், தலை மற்றும் தொண்டைப் பகுதி போன்ற உறுப்புகளில் உள்ள நுண்ணிய கேன்சர் கட்டிகளையும், குறைந்த பக்க விளைவுகளுடன் குணப்படுத்த முடியும். PET-CT ஸ்கேனர் மற்றும் எண்டோபிரோன்கியல் அல்ட்ராசவுண்ட் (EBUS) வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சியில்  காவேரி கேன்சர் இன்ஸ்டிட்யூட் ....புதிய மருத்துவமனை குறித்து கருத்து தெரிவித்த காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர், டாக்டர்  செங்குட்டுவன் கூறுகையில்  திருச்சிக்கு அதிநவீன புற்றுநோய் சிகிச்சை தொழில்நுட்பத்தையும் நிபுணத்துவத்தையும் கொண்டு வருவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கூடிய விரைவில் புற்றுநோய்க்கான அணு மருத்துவத்தையம் அறிமுகப்படுத்த உள்ளோம். எங்கள் பல்துறை குழுவில் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ புற்றுநோயியல் நிபுணர்கள், கதிர்வீச்சியல் நிபுணர்கள், பிளாஸ்டிக் மற்றும் இரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்ளனர். குழந்தைப்பருவ புற்றுநோய் மற்றும் இரத்த புற்றுநோய்களுக்கான சிறப்பு நிபுணர்களும் உள்ளனர். இனி அதிநவீன, மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைகளுக்காக பெரிய நகரங்களுக்குப் பயணம் செய்ய வேண்டிய தேவை தென் தமிழகத்தில் உள்ள நோயாளிகளுக்கு இல்லை, ” என்றார்.

திருச்சியில்  காவேரி கேன்சர் இன்ஸ்டிட்யூட் ....மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து கருத்து தெரிவித்த காவேரி கேன்சர் இன்ஸ்டிட்யூட்டின் புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர் அனிஷ் கூறுகையில்: “புற்றுநோய் சிகிச்சை முறைகள் வேகமாக முன்னேறி வருகின்றன. எங்கள் புதிய மருத்துவமனையின் சிறப்பு அனைத்து வகை புற்றுநோய் சிகிச்சைகளையும் வழங்க வலுவான நிபுணர்கள் குழு முழுநேரமும் இருப்பதுதான். இங்கு சிகிச்சை பெறும் ஒவ்வொரு நோயாளியின் சிகிச்சை திட்டமும் பல்வேறு புற்றுநோயியல் நிபுணர்களின் குழுவால் கூட்டாக ஆலோசிக்கப்பட்டு தீர்மானிக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு நோயாளிக்கும் சிறந்த, பிரத்யேக சிகிச்சைகள் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது,” என்றார்.

மேலும், உடல் பருமன், புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற காரணிகளால் புற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தொழில்நுட்பங்களும் மேம்பட்டுவருவதால் சிகிச்சை வெற்றி வாய்ப்புகளும் வெகுவாக முன்னேறியுள்ளன. இன்று, 85%-90% ஆரம்ப கட்ட புற்றுநோய்களை முற்றிலும் குணப்படுத்த முடியும். தாமதமாக கண்டறியப்பட்ட புற்றுநோய்களுக்கு தீர்வு அளிப்பதிலும் சுமார் 65%-75% வெற்றி காண வாய்ப்பு உள்ளது என்று   குறிப்பிட்டார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.