காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தமிழக ஜனதாதளத்தின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் மாநில தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் கே சி ஆறுமுகம், அறிவழகன்,கோவிந்தராஜ், ரெயில் குப்புசாமி,
வழக்கறிஞர் ராஜசேகரன, மகளிர் அணி ராமலட்சுமி,கடலூர் சங்கர், மாவட்ட தலைவர் சரவணன், ரவி,தஞ்சை கார்த்திக் நாகராஜ், துரைசாமி,திருச்சி மாவட்ட தலைவர் அருண்குமார், நிர்வாகிகள் முருகானந்தம், கிஷோர், ராகுல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கர்நாடக அரசு கட்டவுள்ள மேகதாது அணை திட்டத்தினை தடுக்க தமிழக அரசு சட்டமன்றத்தில் அரசின் சார்பில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அது அனைத்து கட்சிகளாலும் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இதை தமிழக ஜனதாதளம் முழு மனதுடன் வரவேற்பதோடு மட்டுமல்லாமல் இவ்விஷயத்தில் தமிழக ஜனதாதளம் முழு ஒத்துழைப்பை தமிழக அரசுக்கு வழங்கும் என தீர்மானிக்கப்பட்டது. தமிழக ஜனதாதளத்தின் முக்கிய கோரிக்கையான தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இராசி மணலில் அணை கட்டும் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.  மேலும் காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
தற்போது பதவியேற்றுள்ள தமிழக வெற்றி கழக அரசு போதை பொருள் ஒழிப்பிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்வதை மத்திய அரசு தடைச் செய்ய வேண்டுமென தமிழக ஜனதாதளம் கேட்டுக் கொள்வது என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.