அங்குசம் சேனலில் இணைய

குளித்தலை அகண்ட காவிரியில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கன அடி தண்ணீர் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

குளித்தலை அகண்ட காவிரியில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டுள்ளது – இதனை தமிழ்நாடு நில நிர்வாக ஆணையர் கே. எஸ்.பழனிச்சாமி இன்று ஆய்வு செய்தார். கரூர் மாவட்டம், குளித்தலை அகண்ட காவிரி கடம்பன் துறை காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டுள்ளது.

இதை அடுத்து காவிரியில் குளிக்கவும் துணி துவைக்க கூடாது என போலீசார் எச்சரித்து வருகின்றனர். காவிரிக்குச் செல்லும் வழித்தடங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. காவிரி படுகையில் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இந்நிலையில் தமிழ்நாடு நில நிர்வாக ஆணையர் கே.எஸ். பழனிச்சாமி இன்று குளித்தலை வந்தார். ராஜேந்திரம், மருதூர், குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்று பகுதிகளுக்கு சென்று நீரின், அளவு மற்றும், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரியிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், குளித்தலை கோட்டாட்சியர் தனலட்சுமி, குளித்தலை நகராட்சி ஆணையர் நந்தகுமார், தீயணைப்பு துறை அதிகாரி கர்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

– நௌஷாத்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.