ஊடு பயிர்களை நடவு செய்து பொங்கல் பண்டிகையை கொண்டாடிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஊழியர்கள் !
பூச்சிகளை கட்டுப்படுத்த ஊடு பயிர்களை நடவு செய்து பொங்கல் பண்டிகையை வித்தியாசமான முறையில் கொண்டாடிய வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஊழியர்கள்.
தமிழர் திருநாள் தைப்பொங்கல் பண்டிகை வரும் செவ்வாய் கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கோவில்பட்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
ஊழியர்கள் வண்ண கோலமிட்டு பொங்கல் வைத்தனர். தொடர்ந்து ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதையெடுத்து பாண்டவர்மங்கலம் கிராமத்தில் உள்ள நெல் பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ள வயலில் பூச்சிகளில் பயிர்களை காக்கும் வகையில் உளுந்து விதைகள் மற்றும் கேந்தி நாற்றுகளை வரப்பு பயிர்களாக வேளாண்மைதுறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நடவு செய்து பொங்கல் பண்டிகையை வித்தியசாமான முறையில் கொண்டாடடினர்.
— மணிபாரதி.